சிங்கப்பெண்ணில் அன்பு கொடுத்த க்ளூ, ஆடுபுலி ஆட்டம் ஆட போகும் துளசி.. பகடை காயான ஆனந்தி!

Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலில் இன்றைய ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அன்பு சரியான க்ளு ஒன்றை துளசியின் கையில் கொடுத்து பெரிய ஆடு புலி ஆட்டமே அவள் ஆடி முடிக்க உதவி இருக்கிறான் என்று தான் சொல்ல வேண்டும்.

இதுவரையிலும் துளசி கேரக்டர் எதனால் உள்ளே வந்தது என்பது ரசிகர்களுக்கு பெரிய குழப்பம் தான்.


ஆனந்தி முழுக்க அன்புவை வெறுக்கிறாள் என நினைக்கும் அன்புவின் அம்மாவுக்கு எப்படியாவது துளசியை அன்புவுக்கு திருமணம் செய்து வைத்து விட வேண்டும் என்பதுதான் ஆசை.

பகடை காயான ஆனந்தி!

இன்னொரு பக்கம் மகேஷ் ஆனந்தி தனக்கு கிடைக்காவிட்டாலும் அவள் ஆசைப்பட்ட வாழ்க்கையாவது அவளுக்கு கிடைக்க வேண்டும் என உதவ முன்வந்து இருக்கிறான். இது எல்லாவற்றிற்கும் இப்போதைக்கு முட்டுக்கட்டையாக இருப்பது ஆனந்தியின் கர்ப்பம் தான்.

ஆனந்திக்கு ஒரு பக்கம் தான் கர்ப்பமாக இருப்பது, இன்னொரு பக்கம் அக்காவின் திருமணம் என அல்லாடி கொண்டிருக்கிறாள். இது போன்ற நேரத்தில் தான் துளசியும் அன்புவின் வாழ்க்கையில் வந்து இருக்கிறாள்.

நேற்றைய எபிசோடில் ஆனந்தி மனதில் அன்பு இல்லை என அன்புவின் தங்கை யாழினி துளசி இடம் சொல்கிறாள். இதை தெரிந்து கொண்ட துளசி அன்பு விடம் இதை பற்றி பேசுகிறாள்.

ஆனால் அன்பு ஆனந்தி என் வாழ்க்கையில் இல்லை என்றால் வேறு எந்த பெண்ணுக்கும் என் வாழ்க்கையில் இடமில்லை என்று சொல்லி விடுகிறான். அதன் பின்னர் இன்றைய ப்ரோமோவில் துளசி ஆனந்தியை தேடி ஹாஸ்டலுக்கு போவது போல் காட்டப்படுகிறது.

ஒரு வேளை ஆனந்தி இடமே தன்னுடைய காதல் கை கூடுவதற்கு துளசி உதவி கேட்கப் போகிறாளோ என்ற சந்தேகம் எல்லோருக்கும் இருக்கிறது. இன்னொரு பக்கம் யாரும் எதிர்பாராத வண்ணம் ஆனந்தியின் பிரச்சனையே தெரிந்து கொண்டு அவளுக்கு உதவுகிறாளா என பொறுத்திருந்து பார்க்கலாம்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →