ஹீரோயிசத்தை நம்பாமல் கதையை நம்பி ஜெயித்த 6 டாப் ஹீரோக்கள்.. பெரிய ரிஸ்க் எடுத்த தனுஷ்

Dhanush: ஹீரோ என்றாலே 10 பேரை போட்டு அடிக்க வேண்டும். பக்கம் பக்கமாக பஞ்ச் டயலாக் பேச வேண்டும் என்பது எழுதப்படாத விதி.

ஒரு சில டாப் ஹீரோக்கள் மட்டுமே புது முயற்சியாக கதையை மட்டும் நம்பி களம் இறங்கி இருக்கிறார்கள். அதில் ஜெயித்தும் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட ஆறு ஹீரோக்களை பற்றி பார்க்கலாம்.

கதையை நம்பி ஜெயித்த 6 டாப் ஹீரோக்கள்

சூர்யா: சூர்யா கதையை மட்டுமே நம்பி ஜெயித்த படங்கள் என ஒரு லிஸ்ட் எழுதலாம். அதில் முக்கியமானது பிதாமகன் படம். ஏமாற்று வேலைகள் செய்து பணம் சம்பாதிக்கும் கேரக்டர்.

சூர்யாவுக்கு காமெடி வரும் என்பதே இந்த படத்தின் மூலம் தான் மக்களுக்கு தெரியும். அழுக்கு சட்டை, லுங்கி, திருட்டுப் பார்வை என சூர்யா இந்தப் படத்தில் மிரட்டி ஜெயித்து இருப்பார்.

கமல்: தமிழ் சினிமாவின் மிகப்பெரிய ஆளுமைகளில் ஒருவர் கமலஹாசன். இவர் ஒரு படம் முழுக்க வசனம் எதுவும் பேச மாட்டார். ஏன் படத்தின் இன்டர்வல் காட்சி வரைக்கும் இவர் வரவே மாட்டார் என்றால் அந்த படம் ஜெயிக்கும் என யார் நம்புவார்கள்.

அதை சாத்தியப்படுத்தி காட்டியது லோகேஷ் கனகராஜின் விக்ரம் படம். கமலுக்கு இந்த படம் பல வருடங்களுக்குப் பிறகு பெரிய வெற்றி படமாக மாறியது.

விஜய்: நடிகர் விஜய் தன்னுடைய மாஸ் ஹீரோ என்ற கெத்தில் இருந்து கொஞ்சம் விலகி நடித்த படம் தான் நண்பன்.

திறமையான காலேஜ் ஸ்டுடென்ட், நட்பு, கல்வி முறை, காதல் என ரொம்பவும் கூலாக விஜய் இந்த படத்தில் நடித்திருப்பார்.

திருமலை, திருப்பாச்சி, சிவகாசி போன்ற அதிரடி ஆக்சன் படங்களை பார்த்துக் கொண்டிருந்த விஜய் ரசிகர்களுக்கு இந்த படம் பெரிய ட்ரீட் ஆக அமைந்தது.

தனுஷ்: நடிகர் தனுஷ் அசுரன் படத்தில் ஏற்று நடித்த கதாபாத்திரம் எந்த ஹீரோவாளும் நினைத்து கூட பார்க்க முடியாதது.

படம் முழுக்க, தோலுக்கு மேல் வளர்ந்த இரண்டு பிள்ளைகளின் அப்பா, குடும்பத்தின் மீதான அக்கறை, வில்லனுக்கு பயந்து ஓடி ஒளிவது என ரொம்பவும் பக்குவப்பட்ட ஐம்பது வயது சிவசாமியின் கேரக்டர். இதை தனுஷ் ஏற்று நடித்து அதில் வெற்றியும் பெற்றார்.

சரத்குமார்: ஹீரோக்கள் ஏதாவது ஒரு காமெடி காட்சி அல்லது பாட்டில் பெண் கெட்ட போட்டுக் கொண்டு வருவது எப்போதும் நடக்கும் விஷயம் தான்.

ஆனால் அதைத் தாண்டி ஒரு ஹீரோவுக்கு திருநங்கையாக நடிப்பதற்கு தைரியம் அதிகமாக வேண்டும். அப்படி ஒரு கேரக்டரில் சிறப்பாக நடித்திருந்தார் சரத்குமார்.

ஒரு சில காட்சிகளிலே இவர் வந்தாலும் காஞ்சனா படம் இவருக்கு பெரிய அளவில் பெயர் வாங்கி கொடுத்தது.

விக்ரம்: விக்ரம் எந்த படத்திலும் ஹீரோயிசத்தை நம்பி களம் இறங்கியதே கிடையாது. இவருடைய லிஸ்டில் இந்த மாதிரி படங்கள் தான் ரொம்ப அதிகம். அதில் முக்கியமாக சொல்ல வேண்டியது பிதாமகன்.

இந்த படத்தில் வெட்டியான் கேரக்டரில் நடித்ததோடு படம் முழுக்க இவருக்கு ஒரு வசனம் கூட கிடையாது. இந்த படத்தை விக்ரம் நடித்த வெற்றியும் பெற்றார்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →