அரசியின் அதிகாரத்தால் தொடை நடுங்கியாக இருக்கும் குமரவேலு.. தண்ணீரில் மிதக்கும் பாண்டியன்

Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், அரசி தன்னுடைய குடும்பத்தின் மானத்தை காப்பாற்றுவதற்காக ஏதாவது பண்ண வேண்டும் என்ற நோக்கத்தில் குமரவேலு எனக்கு தாலி கட்டி விட்டான் என்று பொய் சொல்லி விட்டார். இதை நம்பிய பாண்டியன் குடும்பம் அரசியை வெறுத்து ஒதுக்கும் அளவிற்கு தண்ணீர் தெளித்து விட்டார்கள்.

ஆனாலும் நம்பிக்கை துரோகம் செய்த அரசியை நினைத்து பாண்டியன் எதுவும் பேச முடியாமல் கடைக்கு கிளம்பி விடுகிறார். ஆனால் அங்கு வருபவர்கள் அரசி செய்த துரோகத்தை பற்றி பேசி பாண்டியனை இன்னும் கஷ்டப்பட்டு விட்டார்கள். இதனால் நொந்து போன பாண்டியன் வீட்டிற்கு வரும் பொழுது நிதானம் இல்லாமல் குடித்துவிட்டு வீட்டிற்கு வருகிறார்.

ஆனாலும் அரசி செய்த துரோகத்தால் அதிக அளவில் பாதிக்கப்பட்டிருப்பது பாண்டியன் தான். அதனை மறப்பதற்காக தான் சரக்கு அடித்து விட்டு வந்திருக்கிறார் என்று யாரும் எதுவும் சொல்லவில்லை. அந்த வகையில் வீட்டிற்கு வந்த பாண்டியன் தண்ணீரில் மிதக்கும் அளவிற்கு நிதானம் இல்லாமல் இருக்கிறார். இதையெல்லாம் பார்த்து கோமதி கடவுளிடம் நொந்து புலம்புகிறார்.

இன்னொரு பக்கம் அரசியிடம் உனக்கு குமரவேலு தான் பிடித்திருக்கிறது, அவனை தான் கல்யாணம் பண்ண வேண்டும் என்றால் உங்க அப்பா, மாப்பிள்ளை பார்க்கும்போதே சொல்லி இருக்க வேண்டியதுதானே. ராஜி பண்ண அதே தப்ப நீயும் பண்ணிட்டு வந்திருக்கிறாய் என்று ராஜி அம்மா அரசிடம் சொல்கிறார். அதற்கு அரசி நானும் எங்க அப்பாவிடம் சத்தியம் செய்தது உண்மைதான்.

எங்க அப்பா சொன்னபடி குமரவேலுடன் பேசாமலும் பழகாமலும் இருந்து கல்யாணத்திற்கு தயாரானேன். ஆனால் இதற்கெல்லாம் காரணம் குமரவேலு தான். ஏனென்றால் அவர்தான் அவங்க சொல்றபடி கேட்டு நடந்து கொள். எப்படி உன் கழுத்தில் தாலி கட்டணும் என்று எனக்கு தெரியும் அந்த வேலையை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சொன்னார்.

நீங்கள் எது கேட்கிறதாக இருந்தாலும் அவரிடம் கேட்டுக்கோங்க என்று மொத்த பழியையும் குமரவேலு மீது போட்டு விடுகிறார். குமரவேலு இது என்ன வாய்க்கு வந்தபடி எல்லாம் பொய் சொல்லி நம்மளை மாட்டிவிடுகிறது என்று புலம்புகிறார். அத்துடன் இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த சுகன்யாவும் நமக்கே தெரியாமல் இந்த அரசி கமுக்கமாக இவ்வளவு வேலை பார்த்திருக்கிறாரே என்று நினைக்கிறார்.

அடுத்ததாக குமரவேலு ரூமுக்கு கூட்டிட்டு போய் விடுகிறார். அப்படி குமரவேலு ரூமுக்கு போன அரசி, யதார்த்தமாக நடந்து கொண்டு தூங்கப் போகிறார். ஆனால் இதையெல்லாம் பார்த்து கடுப்பான குமரவேலு அரசியை திட்டுகிறார். ஆனால் அரசி இதற்கெல்லாம் அசராமல் உங்களுக்கு நான் செய்தது பிடிக்கவில்லை என்றால் அப்பொழுதே எல்லாரும் முன்னாடியும் நான் சொன்னது பொய்.

என் கழுத்தில் நீங்கள் தாலி கட்டவில்லை, சும்மா பாண்டியன் குடும்பத்தை பழி வாங்குவதற்காக தான் கூட்டிட்டு போனேன் என்று சொல்ல வேண்டியது தானே. அங்க சொல்லாமல் தொடை நடுங்கியாக இருந்து கொண்டு இப்பொழுது என்னிடம் வந்து பேசுகிறீர்களா என்று சொல்லி குமரவேலு வாயை அடைத்து விடுகிறார். ஆனால் என்ன ஆனாலும் அரசி வாழ்க்கை போனது போனதுதான்.

vijay-founder-of-cinemapettai

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.

View all posts →