வடசென்னை 2 எப்போ.? தனுஷ் கொடுத்த அப்டேட்

Dhanush : கடந்த 2018 ஆம் ஆண்டு தனுஷ் மற்றும் வெற்றிமாறன் கூட்டணியில் வடசென்னை படம் வெளியானது. அமீர், சமுத்திரகனி, ஆண்ட்ரியா என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்திருந்தனர். வடசென்னையின் பிரதிபலிப்பாக தான் இந்த படம் இருந்தது.

எப்போது வடசென்னை 2 படம் வரும் என்று ரசிகர்கள் கேட்டுக் கொண்டிருக்கின்றனர். இந்த சூழலில் வெற்றிமாறன் சூரியை வைத்து விடுதலை ஒன்று மற்றும் இரண்டு ஆகிய படங்களை இயக்கி கொண்டிருந்தார். இதைத்தொடர்ந்து சமீபத்தில் வெற்றிமாறன் ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

அதாவது வாடிவாசல் படத்திற்கு பிறகு தனுஷ் உடன் இணைய உள்ளதாக கூறினார். இது வடசென்னை 2 படமாக இருக்குமா என ரசிகர்கள் கேள்வி எழுப்பினர். இப்போது தனுஷ் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும்படி ஒரு அப்டேட் கொடுத்திருக்கிறார்.

வடசென்னை 2 எப்போது அப்டேட் கொடுத்த தனுஷ்

ஜூன் 20 ஆம் தேதி தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள குபேரா படம் வெளியாக இருக்கிறது. இதற்கான இசை வெளியீட்டு விழா நடந்த நிலையில் அதில் வடசென்னை படத்தை பற்றி தனுஷ் பேசியிருக்கிறார். 2018 இல் இருந்து எப்போது வடசென்னை 2 வரும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள்.

அடுத்த ஆண்டு இந்த படத்திற்கான பூஜையை தொடங்க உள்ளோம் என்று தனுஷ் கூறியிருக்கிறார். அப்படி என்றால் வெற்றிமாறன் தனுசுடன் மீண்டும் இணைய உள்ளதாக கூறியது வடசென்னை 2 படம் தான் என்பது இப்போது தெரியவந்திருக்கிறது.

இதனால் தனுஷ் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை, அசுரன் படங்களை தொடர்ந்து இந்த படமும் வெற்றிமாறன் மற்றும் தனுஷ் கூட்டணியில் பிளாக்பஸ்டர் ஹிட் லிஸ்டில் இணைய இருக்கிறது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →