மொத்த கஷ்டத்தையும் போட்டுடைத்து குமுறிய தனுஷ்.. குடைச்சலுக்கு குபேரன் கொடுத்த பதிலடி

குபேரன் பட நிகழ்ச்சி நேற்று சாய்ராம் இன்ஜினியரிங் காலேஜில் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் பேசிய தனுஷ், தன்னுடைய மனதில் உள்ள மொத்த கஷ்டத்தையும் போட்டு போட்டுடைத்துள்ளார். அவரைப் பற்றி வதந்தி பரப்பி வருபவர்களுக்கும் தக்க பதிலடி கொடுத்துள்ளார்.

சினிமா பிரபலங்களுக்கிடையே எந்த பிரச்சனை வந்தாலும் அதற்கு காரணம் தனுஷ் தான் என்று கிளப்பி விடுகிறார்கள். குறிப்பாக நடிகர் நடிகைகளுக்கு விவாகரத்து, சண்டை, தயாரிப்பாளர்கள் பிரச்சனை என எல்லாத்துக்கும் இவரை சுற்றி வலை பின்னுகிறார்கள். குறிப்பாக பாடகி சுசித்ரா ஆரம்பத்திலிருந்து இவருக்கு எதிராக பலவற்றை கிளப்பி விடுகிறார்.

தனுஷ் இன்று தமிழ் சினிமாவில் இருக்கும் டாப் 5 நடிகர்களில் ஒருவர். நடிக்க வந்த புதிதில் அவதூறு பேச்சுகளை சந்தித்தாலும் இன்று சினிமாவில் ஆலமரம் போல் வளர்ந்து நிற்கிறார், நடிப்பு ராட்சசன் என தன்னை நிரூபித்து காட்டியுள்ளார்.

சமீபத்தில் அவருடைய மகன் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டார், தனுஷின் மனைவி ஐஸ்வர்யாவும் சென்றிருந்தார். இருவரும் மகனை பாராட்டும் போட்டோக்கள் கூட வெளிவந்தது. இவர்கள் இருவரும் பிரிந்து வாழ்ந்தால் கூட பிள்ளைகளுக்காக பல இடங்களில் ஒன்றாய் நிற்கின்றனர்.

இப்படி போய்க்கொண்டிருக்கும் தனுஷ் வாழ்க்கையில் வதந்திகள் ஏராளமாய் பரவத் தொடங்கியது. அதற்கு தனுஷ் ஒருவேளை சாப்பாட்டுக்கு கூட கஷ்டப்பட்டு இருக்கிறேன் அப்பொழுதும் சந்தோஷமாய் இருந்தேன் இப்போதும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். யார் என்ன சொன்னாலும் கவலை இல்லை நல்லதை செய்து வாழுங்கள் என குபேரன் பட நிகழ்ச்சியில் பேசி வாயடைக்க செய்தார்.

thenmozhi

Thenmozhi

தேன்மொழி - கடந்த 8 ஆண்டுகளாக சினிமா தொடர்பான செய்திகளை எழுதி வருகிறார். OTT செய்திகள் மற்றும் விமர்சனங்களில் ஆர்வம் கொண்டவர். உண்மையான மற்றும் பயனுள்ள தகவல்களை கொண்டு சேர்ப்பதே இவரின் குறிக்கோள்.

View all posts →