சிங்கப்பெண்ணில் ஆனந்தியை கட்டம் கட்டிய துளசி.. வான்டடாக சிக்க போகும் வேலு-வாணி

Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலின் இன்றைய ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. துளசி எதற்காக அன்புவை தேடி வந்திருக்கிறாள் என்பதற்கான விடை ரசிகர்களுக்கு கிடைத்து விட்டது. இனி துளசி மூலம் ஆனந்தியின் கர்ப்பத்தை பற்றி வெளியில் தெரிகிறதா என்பதுதான் அடுத்த கட்ட கதை நகர்வு.

அன்பு மற்றும் ஆனந்தி சேர்ந்து விடக்கூடாது என மகேஷ் தான் நினைக்கிறான் என முதலில் துளசி நினைத்துக் கொண்டிருந்தாள். பின்னர் மகேஷுக்கும் இதில் சம்பந்தம் இல்லை என்பது தெரிந்து விட்டது.

ஆனந்தியை கட்டம் கட்டிய துளசி

துளசி மீண்டும் வந்து அன்பு வைத்த திருமணம் செய்து கொள்வதை பற்றி பேசியும் ஆனந்தி எந்த ஒரு சலனமும் இல்லாமல் இருக்கிறாள். இதனால் துளசிக்கு முழுக்க முழுக்க ஆனந்தி மீதுதான் சந்தேகம் வருகிறது.

தான் அன்புக்கு சரியான ஜோடி இல்லை என ஆனந்தி நினைக்க என்ன காரணம் என்பதை தற்போது மகேஷ் மற்றும் துளசி கண்டுபிடிக்க இருக்கிறார்கள். இதற்காக அவர்கள் செல்ல இருப்பது தான் ஆனந்தியின் கர்ப்பத்தை உறுதி செய்த மருத்துவமனை.

அதே நேரத்தில் வேலுவிடம் இருக்கும் நகையை வாங்கி அக்கா கோகிலாவின் திருமணத்தை சிறப்பாக நடத்த ஆனந்தி திட்டமிட்டு இருக்கிறாள். ஆனால் கோகிலாவுக்கு அந்த நகையை கொடுப்பதில் வேலுவின் மனைவி வாணிக்கு கொஞ்சம் கூட சம்மதம் இல்லை.

இதனால் ஆனந்திக்கு மற்றும் ஒரு நெருக்கடியை கொடுக்க வாணி தயாராகிக் கொண்டிருக்கிறாள். மகேஷ் மற்றும் துளசியின் துப்புத் துலக்கல் திட்டத்தில் ஆனந்தியின் கர்ப்பம் பற்றி தெரிந்து கொள்கிறார்களா, வாணியிடமிருந்து நகைகளை வாங்கி அக்காவின் திருமணத்தை ஆனந்தி நடத்துகிறாளா என பொறுத்திருந்து பார்க்கலாம்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →