தொலைக்காட்சி

கயல் சீரியலில் நடிக்கும் ஆர்டிஸ்ட்களின் சம்பள விவரம்.. 1000 எபிசோடுக்கு மேல் போக இதுதான் காரணம்

By · 04 ஜூன் 2025 · Updated 04 ஜூன் 2025
kayal (10)

Kayal Serial: சன் டிவி சீரியலில் தொடர்ந்து ஆயிரம் எபிசோடுக்கு மேல் ஒளிபரப்பாகி மக்களின் வரவேற்பை பெற்ற சீரியல் கயல். இந்த சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் முதல் மூன்றாவது இடத்தை தக்க வைத்து வருகிறது. ஆரம்பத்தில் முதல் இடத்தை பிடித்திருந்தாலும் போகப்போக இந்த சீரியலில் கதை புதுசாக எதுவும் இல்லாமல் இருப்பதால் பார்ப்பவர்களுக்கு கொஞ்சம் சலிப்பை ஏற்படுத்தி விட்டது.

இதனால் கடந்த சில மாதங்களாக மூன்றாவது இடத்தில் தான் இருக்கிறது. ஆனாலும் இந்த சீரியல் முடிக்காமல் போவதற்கு டிஆர்பி ரேட்டிங்கில் டாப் 3குள் வருவதால் சன் டிவி இந்த நாடகத்தை இழுத்தடித்து வருகிறார்கள். தற்போது கயலை புரிந்து கொள்ளாத அண்ணி பணம் கேட்டு ரொம்பவே பிரச்சினை பண்ணி வந்தார். ஆனால் அந்த பணம் அனுவின் மருத்துவ செலவுக்கு தான் என்று கயல் யாரிடமும் சொல்லாமல் மறைத்து விட்டார்.

தற்போது அந்த விஷயம் அண்ணிக்கு தெரிந்த நிலையில் கடுமையாக பேசிய கயலிடம் மன்னிப்பு கேட்டு வருத்தப்பட்டு விட்டார். ஆனால் தனத்தை இன்னும் வில்லியாக காட்டுவதற்காக பெரியம்மா வன்மத்தை திணிக்கிறார். இதை அடுத்து தனம், கயலை புரிந்து கொள்வாரா அல்லது மீண்டும் சண்டை போடுவாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

மேலும் தற்போது இதில் நடிக்கும் ஆர்டிஸ்டிகளின் சம்பள விபரம் வெளியாகி இருக்கிறது. ஒரு நாளைக்கு வாங்கும் சம்பள விவரங்கள் என்ன என்பதை பற்றி தற்போது பார்க்கலாம். கயல் கேரக்டரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி ஒரு நாளைக்கு 30 ஆயிரம் ரூபாய் வாங்குகிறார். எழில் கதாபாத்திரத்தில் நடிக்கும் சஞ்சீவ் 25 ஆயிரம் ரூபாய் வாங்குகிறார்.

கயலின் அண்ணனாக மூர்த்தி கதாபாத்திரத்தில் நடிப்பவருக்கு 15 ஆயிரம் ரூபாய் மற்றும் காமாட்சி, ராஜலட்சுமி, மாலதி, சிவசங்கரி அவர்கள் 12000 ரூபாய் வாங்குகிறார்கள். விக்னேஷ், தேவி கேரக்டரில் நடிப்பவர் பத்தாயிரம் ரூபாயும், ஷாலினி கேரக்டரில் நடிக்கும் கயலின் தங்கை 8000 ரூபாயும் ஆறுமுகம் கேரக்டரில் நடிப்பதற்கு 5000 ரூபாயும் வழங்கப்படுகிறது. இதில் அதிகமாக சம்பளம் வாங்கும் நடிகை சைத்ரா ரெட்டி தான்.