ரோலக்ஸை தூக்கி சாப்பிட வரும் வால்டர்.. லோகேஷின் பென்ஸ் மிரட்டல் அப்டேட்

Benz: லோகேஷ் தலைவரை வைத்து கூலி படத்தை எடுத்து முடித்துள்ளார். இன்னும் சில மாதங்களில் படம் திரைக்கு வருகிறது. அதை அடுத்து கைதி 2 உட்பட பல ப்ராஜெக்ட் அவர் கைவசம் இருக்கிறது.

அதேபோல் தயாரிப்பிலும் அவர் ஆர்வம் காட்டி வருகிறார். இந்நிலையில் அவர் கதை எழுத பாக்யராஜ் கண்ணன் பென்ஸ் படத்தை இயக்குகிறார்.

எல் சி யு வின் ஒரு அங்கமாக இருக்கும் இப்படத்தில் ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடிக்கிறார். மற்ற அறிவிப்பு விரைவில் வெளியாகும் என பூஜை போடும்போது செய்திகள் வந்தது.

லோகேஷின் பென்ஸ் மிரட்டல் அப்டேட்

அதன்படி தற்போது படத்தில் நிவின் பாலி இணைந்துள்ளதை ஒரு வீடியோ மூலம் பட குழு அறிவித்துள்ளது. ஆனால் இது எதிர்பார்த்ததற்கும் மேலாக மிரட்டல் சர்ப்ரைஸ் ஆக இருக்கிறது.

விக்ரம் படத்தில் ரோலக்ஸ் கேரக்டர் எப்படியோ அப்படித்தான் நிவின் பாலி பென்ஸ் படத்தில் வால்டர் என்ற கேரக்டரில் நடிக்கிறார். அதிலும் அவருடைய தோற்றம் அடையாளமே தெரியாத அளவுக்கு வேற லெவலில் இருக்கிறது.

அதை பார்க்கும்போது அவர்தான் வில்லன் என்பதை கணிக்க முடிகிறது. அதேபோல் லுங்கி பனியன் துண்டு என லோக்கல் தோற்றத்திலும் ஒரு நிவின் பாலி அந்த வீடியோவில் இருக்கிறார்.

அப்படி என்றால் இரு கேரக்டரா என்ற சந்தேகம் இருக்கிறது. இல்லை பிரமோஷனுக்காக இந்த யுக்தியா என்றும் தெரியவில்லை.

ஆனால் நிச்சயம் இந்த வால்டர் கதாபாத்திரம் தமிழ் ஆடியன்ஸை கவர்ந்து விடும். ரோலக்ஸ் கேரக்டர் எந்த அளவுக்கு வெற்றி பெற்றதோ அதே அளவுக்கு வால்டர் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

இதன் மூலம் நிவின்பாலி தமிழில் தனக்கான ஒரு இடத்தை பிடிப்பார் என்று தெரிகிறது. பகத் பாசிலுக்கு கிடைத்த அதே ஆதரவு இவருக்கும் கிடைக்கும் என்பதே அனைவரின் கருத்து.