மாமியாருக்கு போட்டியாக களமிறங்கிய ரவி மோகன்.. திடீரென எடுத்த அதிரடி முடிவு

Ravi Mohan : ரவி மோகனின் ஒவ்வொரு செய்தியும் ரசிகர்களை அதிர்ச்சியாகி வருகிறது. அந்த வகையில் ஆர்த்தியை விவாகரத்து செய்வதாக முதலில் கூறினார். காதல் பறவைகளாக வலம் வந்த இவர்களின் திடீர் விவாகரத்திற்கு என்ன காரணம் என பலரும் அதிர்ச்சி அடைந்தனர்.

அதன் பிறகு கெனிஷா உடன் எங்கு சென்றாலும் ரவி மோகன் ஜோடியாக சென்று வருகிறார். விரைவில் இவர்கள் திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. அடுத்ததாக ரவி மோகன் அதிரடியாக ஒரு முடிவு எடுத்திருக்கிறார்.

ரவி மோகனின் மாமியார் அதாவது ஆர்த்தியின் அம்மா பிரபல தயாரிப்பாளர் சுஜாதா. இவர் சின்னத்திரை தொடர்களை நடித்த நிலையில் ரவியின் பல படங்களை தயாரித்திருக்கிறார். இதில் அடங்கமறு போன்ற படங்கள் அடங்கும்.

ரவி மோகன் எடுத்த அதிரடி முடிவு

மேலும் சுஜாதா கூறுகையில் ரவி மோகனால் தனக்கு நிறைய நஷ்டம் ஏற்பட்டதாக கூறினார். ரவி மோகன் தரப்பில் இருந்து தன்னால் வேறு படங்களில் நடிக்க முடியாமல் சுஜாதா தனது தயாரிப்பு நிறுவனத்தில் நடிக்க வைத்தார் என்றும் குற்றம் சாட்டினார்.

இந்த சூழலில் ரவி மோகன் இன்று புதிய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி இருக்கிறார். அதுவும் ரவி மோகன் ஸ்டுடியோஸ் என்று தன்னுடைய பெயரையே வைத்துள்ளார். சிங்கம் போல் இருக்கும் லோகோ பின்னால் அமைக்கப்பட்டு இருக்கிறது.

மேலும் ரவி மோகன் விரைவில் தனது தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படம் குறித்து அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கலாம். புதிதாக தயாரிப்பு நிறுவனம் தொடங்கியுள்ளதால் அவருக்கு பலரும் வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →