சூர்யாவை கைவிட்ட லோகேஷ்.. கைமாறிய இரும்புகை மாயாவி

Lokesh Kanagaraj : லோகேஷ் கனகராஜ் சூர்யாவை வைத்து இரும்பு கைமாயாவி படத்தை இயக்க இருந்தார். இது பல வருடங்களுக்கு முன்பே ஒப்பந்தமான ப்ராஜெக்ட் தான். ஆனால் சில காரணங்களினால் தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது.

இப்போது சூர்யாவும் பல படங்களில் பிசியாக இருக்கிறார். அதேபோல் லோகேஷ் ரஜினியை வைத்து கூலி படத்தை இயக்கி வருகிறார். இதற்கு அடுத்ததாக அவரது லைன் அப்பில் கைதி 2, விக்ரம் 2, ரோலக்ஸ் என நிறைய படங்கள் இருக்கிறது. எப்போது இரும்புகை மாயாவி தொடங்கும் என ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர்.

ஏனென்றால் சூர்யா ஒரு மிகப்பெரிய வெற்றியை கொடுத்து பல வருடங்கள் ஆகிறது. ஆகையால் லோகேஷ் இரும்புகை மாயாவி படத்தின் மூலம் சூர்யாவுக்கு கம்பேக் கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இப்போது லோகேஷ் பாலிவுட் நடிகர் அமீர்கானை வைத்து படம் இயக்க உள்ளாராம்.

சூர்யாவை கைவிட்ட லோகேஷ் கனகராஜ்

இந்த படம் கிட்டத்தட்ட 500 கோடி பட்ஜெட்டை தாண்டி எடுக்கப்பட உள்ளது. மேலும் இரும்புகை மாயாவி கதையில் தான் இப்போது அமீர்கான் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது. இந்தப் படத்தை 2026 ஆம் ஆண்டு கோடை விடுமுறைக்கு வெளியிட முடிவு செய்து இருக்கின்றனர்.

மேலும் லோகேஷ் கார்த்தியின் கைதி 2 படத்திற்கு பிறகு அமீர்கான் படத்திற்கான படப்பிடிப்பை தொடங்க இருக்கிறார். இந்தப் படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது.

இந்த சூழலில் இரும்புகை மாயாவி படம் அமீர்கான் கைவசம் சென்றது சூர்யா ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தி இருக்கிறது. இப்போது ஆர்.ஜே பாலாஜி மற்றும் வெங்கி அட்லூரி ஆகிய இயக்குனர்களின் படங்களில் சூர்யா நடித்து வருகிறார்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →