வைரமுத்துவை வெறுப்பேற்றிய மணிரத்னம்.. இதுதான் தரமான Thug Life

Mani Ratnam : மணிரத்னம் படங்களில் ஏஆர் ரகுமானின் இசை வைரமுத்துவின் பாடல் வரிகள் இன்றியமையாததாக இருக்கும். ரோஜா படத்தில் தொடங்கிய இவர்களது கூட்டணி அடுத்தடுத்து பல படங்களில் அமைந்து வெற்றி பாடல்களை கொடுத்திருக்கின்றனர்.

இப்படி இருக்கும் சூழலில் மிக பிரம்மாண்ட படமான பொன்னியின் செல்வன் படத்தை மணிரத்னம் இயக்கியிருந்தார். இதில் வைரமுத்துவின் வரிகள் இடம்பெறும் என எதிர்பார்த்த நிலையில், அவரை மணிரத்னம் தவிர்த்து விட்டார்.

இதுகுறித்து செய்தியாளர்கள் கேள்வி கேட்டபோது இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளேன் என்று மணிரத்னம் கூறிவிட்டார். இந்த சூழலில் மணிரத்னம், கமல் கூட்டணியில் தக் லைஃப் ஆடியோ லான்ச்சில் சின்மயை அழைத்து முத்த மழை பாடலை பாட வைத்திருந்தனர்.

வைரமுத்துவை வெறுப்பேற்றிய மணிரத்னம்

இந்தப் பாடல் இணையத்தில் செம ட்ரெண்டானது. அதோடு தக் லைஃப் ஆடியோவில் 10வது பாடலாக சின்மயி குரலில் உருவான முத்த மழை பாடல் சேர்க்கப்பட்டுள்ளது. இப்போது பலரும் சின்மயை கொண்டாடி வருகிறார்கள்.

அதாவது வைரமுத்து மீது சின்மயி Me Too விவகாரத்தில் புகார் கொடுத்திருந்தார். அவர் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளையும் வைத்திருந்தார். இதனால் சின்மயி சினிமாவில் சில காலம் பாடக்கூடாது என தடை விதித்திருந்தனர்.

அதையும் மீறி லோகேஷ் சின்மயை லிபாட வைத்திருந்தார். அதோடு இப்போது மணிரத்னமும் சின்மையை தனது பட ஆடியோ லான்ச் பாட வைத்திருக்கிறார். வைரமுத்துவை கடுப்பேற்ற தான் மணிரத்னம் இவ்வாறு செய்துள்ளதாக நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →