தொலைக்காட்சி

700 எபிசோடில் தலைகீழாக மாறிய கதாநாயகனின் நிலைமை.. கண்டுகொள்ளாமல் இருக்கும் விஜய் டிவி

By · 07 ஜூன் 2025 · Updated 07 ஜூன் 2025
vijay tv-logo

Vijay Tv Serial: விஜய் டிவி சேனல் ஆரம்பத்தில் ரியாலிட்டி ஷோவுக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்தாலும் அவ்வப்போது ஒரு சில சீரியல்கள் மூலம் மக்களையும் என்டர்டைன்மென்ட் பண்ணி வந்தார்கள். அதன் மூலம் கிடைத்த வரவேற்பினால் தொடர்ந்து சீரியலுக்கு மெனக்கீடு செய்து தற்போது 15 சீரியலுக்கு மேல் ஒளிபரப்பு செய்து வருகிறார்கள்.

இதனால் சன் டிவிக்கு ஈடாக விஜய் டிவி சீரியலும் இடம் பிடித்து விட்டது. அப்படி ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் டிஆர்பி ரேட்டிங்கில் அதிக புள்ளிகள் பெற்று மக்கள் மனதில் ஒரு இடத்தை தக்க வைத்தது சிறகடிக்கும் ஆசை. ஆனால் இப்பொழுது எல்லாம் தலைகீழ மாறிவிட்டது என்பதற்கு ஏற்ப 700 எபிசோடுகளில் முதலிடத்தில் இருந்து பின்னாடி போய்விட்டது.

இதற்கு முக்கிய காரணம் ரோகினியின் ஏமாற்று வேலையும், விஜயாவின் வன்மமும், மீனாவின் அழுகையும், முத்துவின் அடாவடித்தனமும், அண்ணாமலையின் அஜாக்கிரதை, மனோஜின் சுயநலம் அதிகமாக இருப்பதால் பார்ப்பவர்களுக்கு போரடித்து விட்டது. இதனால் இந்த சீரியலின் கதாநாயகனாக தூக்கிக் கொண்டாடப்பட்ட முத்துவின் நிலைமை அப்படி மாறிவிட்டது.

ஒரு காலத்தில் இவருடைய நடிப்புக்கும் இவருக்கும் ஏகப்பட்ட ரசிகர்கள் இருந்தார்கள். ஆனால் இப்பொழுது முத்துவின் நடிப்பை பார்க்கும் பொழுது எரிச்சலாக இருக்கிறது, இப்படியும் ஆட்கள் இருப்பாங்களா என்று திட்டும் அளவிற்கு முத்துவின் கேரக்டர் அமைந்துவிடுகிறது. தான் நினைக்கிற தான் நடக்க வேண்டும் என்று நினைக்கும் ஒரு சுயநலம் பிடித்த முத்துவின் கேரக்டர் மக்களுக்கு பிடிக்காமல் போய்விட்டது.

இப்படி தொடர்ந்து சிறகடிக்கும் ஆசை சீரியலுக்கு நெகட்டிவ் விமர்சனங்கள் வந்தாலும் இயக்குனரும் பொருட்படுத்தவில்லை, விஜய் டிவி சேனலும் கண்டுகொள்ளவில்லை. இந்த சமயத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 மற்றும் அய்யனார் துணை மக்களை அதிகம் கவர்ந்து முன்னேறி விட்டது.