47ல் காதல் மலர்ந்த ஹீரோ.. நம்ம விஷால் டச்!

Vishal : விஷாலுக்கு எப்போது திருமணம் நடக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த காத்துக் கொண்டிருந்தனர். அந்த வகையில் 47-வது வயதாகும் விஷால் வருகின்ற ஆகஸ்ட் 29ஆம் தேதி தன்ஷிகாவை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்.

இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை சமீபத்தில் இருவரும் வெளியிட்டனர். இதில் என்ன சுவாரஸ்யம் என்றால் ஆகஸ்ட் 29ஆம் தேதி தான் விஷாலின் பிறந்தநாள். அவருக்கு அன்று 48 வயதாகிறது. இதனால் அன்று திருமணத்தை நடத்த ஏற்பாடு செய்துள்ளனர்.

இந்த சூழலில் விஷால் பாணியில் 47 வயதில் திருமணத்தை முடித்துள்ளார் ஹீரோ ஒருவர். அதாவது கழுகு படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர் தான் நடிகர் கிருஷ்ணா. இவர் பிரபல தயாரிப்பாளர் சேகரின் இளைய மகன் ஆவார்.

விஷால் பாணியில் 47 வயதில் திருமணம் செய்த ஹீரோ

கிருஷ்ணாவுக்கு சமீபத்தில் திருமணம் நடந்துள்ளதாக தனது சமூக வலைத்தளத்தில் புகைப்படம் வெளியிட்டு இருக்கிறார். இதனால் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஆனால் கிருஷ்ணா ஏற்கனவே 2014 ஆம் ஆண்டு ஹேமலதா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்குள் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். அதோடு ஹேமா தயாரிப்பு கவுன்சிலில் கிருஷ்ணா தன்னிடம் வரதட்சனை கொடுமை செய்வதாகவும், பல பெண்களுடன் உறவில் இருப்பதாகவும் புகார் கூறியிருந்தார்.

மேலும் அதன் பிறகு இருவருக்கும் விவாகரத்து கிடைத்தது. இந்த சூழலில் கிருஷ்ணா இப்போது இரண்டாவது திருமணம் செய்துள்ள நிலையில் எங்களுடைய புது பயணம் தொடர்கிறது என்று அதில் பதிவிட்டிருக்கிறார்.