சிங்கப்பெண்ணில் மித்ராவின் குடுமியை பிடிக்கும் அரவிந்த்.. இனி தான் ஆட்டம் சூடு பிடிக்க போகுது!

Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலின் இன்றைய ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. ஆனந்தியின் கர்ப்பத்திற்கு யார் காரணம் என்பதை எப்படி கண்டுபிடிக்க போகிறார்கள் என்பதுதான் நேயர்களின் பெரிய எதிர்பார்ப்பாக இருந்தது.

அதை தாண்டி ஆடு தானாக வந்து சிக்குவது போல் மித்ரா வசமாக மாட்டிக் கொள்ள நேரம் வந்திருக்கிறது. ஒரு பக்கம் கம்பெனியில் ரத்த பரிசோதனை எடுக்கப்பட்டது குறித்து கருணாகரன் மித்ராவிடம் தெரிவிக்கிறார்.

மித்ராவின் குடுமியை பிடிக்கும் அரவிந்த்

ஆனந்தி கர்ப்பமாக இருப்பது வெளியில் தெரிந்து விட்டால் மகேஷ் தான் காரணம் என்பது வெளிவந்து விடும் என மித்ரா பயப்படுகிறாள். அதே நேரத்தில் மித்ராவின் அம்மா சத்தியவதி மற்றும் மகேஷின் அம்மா பார்வதி இருவரும் திருமண ஏற்பாடுகளை தீவிரமாக நடத்த இருக்கிறார்கள்.

மேலும் மித்ராவின் அம்மா அரவிந்திடம் மித்ராவை மகேஷுக்கு தான் நான் திருமணம் செய்து வைப்பேன் என திட்டவட்டமாக கூறிவிடுகிறார். இதனால் அரவிந்துக்கு அடக்க முடியாத கோபம் வந்து விடுகிறது.

போகிற போக்கில் மகேஷ் மித்ராவை திருமணம் செய்து கொள்ளாமல் தடுக்க அரவிந்த் நடந்த உண்மை அத்தனையையும் சொல்ல போகிறான்.

இதனால் ஆனந்தியின் கர்ப்பத்திற்கு மகேஷ் தான் காரணம் என்று தெரியப் போகிறது. அரவிந்த் களத்தில் இறங்கி சிங்க பெண்ணே சீரியலில் சூடு பிடிக்கப் போவதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →