கவுண்டமணி சொன்ன மாதிரி இனிமேல் வந்தா என்ன வராட்டி என்ன.. பிரித்திவ் ஷா கொடுக்கும் ஷாக்

ஐபிஎல் முடிந்த கையோடு TNPL ஆரம்பித்து விறுவிறுப்பாக போய் கொண்டிருக்கிறது. தமிழ்நாடு பிரீமியர் லீக் எனப்படும் இந்த போட்டிகளில் பல ஐபிஎல் வீரர்கள் விளையாடி வருகிறார்கள். அஸ்வின், சாய் கிஷோர், ஷாருக்கான், வருண் சக்கரவர்த்தி, நடராஜன், விஜய் சங்கர் போன்ற வீரர்கள் விளையாடி வருகிறார்கள்.

இதேபோல் மும்பையிலும் பிரீமியர் லீக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. அந்த போட்டிகளிலும் ஐபிஎல் விளையாடிய பல வீரர்கள் பங்கு பெற்றுள்ளனர். குறிப்பாக பிரித்திவ் ஷா. ஸ்ரேயாஸ் ஐயர், சர்துல் தாக்கூர், சிவம் தூபே, சூரியகுமார் யாதவ் போன்ற முக்கியமான வீரர்கள் விளையாடி வருகிறார்கள்.

இதில் தான் இப்பொழுது வருங்கால சச்சின் என முன்னர் போற்றப்பட்ட பிரித்திவ் ஷா விளையாடி வருகிறார். ஏற்கனவே இவர் மீது பல பிரச்சனைகள் இருக்கிறது. உடம்பில் பிட்னஸ் கிடையாது, கிரிக்கெட்டில் முழு ஆர்வம் கிடையாது, பல ஒழுங்கு நடவடிக்கையில் சிக்கி உள்ளார் என்றெல்லாம் இவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

மும்பை பிரிமியர் லீக்கில் விளையாடி வரும் இவர் நேற்றைய போட்டியில் சூரியகுமார் யாதவ் அணிக்கு எதிராக 34 பந்துகளில் 75 ரன்கள் குவித்துள்ளார். இதில் மூன்று சிக்ஸர்களும் 12 பவுண்டரிகளும் அடங்கும், இதன் மூலம் அந்த அணி 20 ஓவர்களில் 207 ரன்கள் குவித்தது.

பின்னர் விளையாடிய சூர்யகுமார் யாதவ் அணியினர் 19 ஓவர்களில் 169 ரண்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்து தோல்வியை சந்தித்துள்ளனர். மேலும் இந்திய அணியில் பிரித்திவ் ஷா வுக்கு பல வாய்ப்புகள் கொடுத்த போதிலும் அதை அவர் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. அவரால் மாற்று வீரராக கூட அணியில் இடம் பெற முடியவில்லை. இனிமேல் அவருக்கு வாய்ப்பு என்பது எட்டாத கணி தான்.