நூறு படத்தில் 8 மட்டுமே ஹிட்.. கோலிவுட்டை அலறவிட்ட 2025

2025 Hit Movies: இந்த வருடம் தொடக்கத்திலிருந்து தமிழ் சினிமாவில் பெரிய எதிர்பார்ப்புடன் வெளியாகும் படங்கள் புஷ் என்று ஆகிவிடுகிறது. ஜனவரி மாதமே அஜித்தின் விடாமுயற்சி படம் வெளியானது. இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் படு தோல்வியை சந்தித்தது.

அடுத்ததாக சூர்யாவுக்கு ரெட்ரோ படமும் பெரிய வரவேற்பு கொடுக்கவில்லை. இதைத்தொடர்ந்து ரவி மோகன் நடித்த காதலிக்க நேரமில்லை படமும் வந்த சுவடே தெரியவில்லை. அடுத்ததாக விஜய் சேதுபதிக்கு ஏஸ், சந்தானத்திற்கு டிடி நெக்ஸ்ட் லெவல் படங்களும் தோல்வியை தான் கொடுத்தது.

அதேபோல் தனுஷ் இயக்கிய நிலவுக்கு என் மேல் என்னடி கோபம், பாலாவின் வணங்கான் படங்களும் ஹிட் லிஸ்டில் இடம்பெறவில்லை. சமீபத்தில் மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு நடிப்பில் வெளியான தக் லைஃப் படமும் மோசமான விமர்சனத்தை பெற்று வருகிறது.

2025 இல் ஹிட்டான எட்டு படங்கள்

இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து கிட்டத்தட்ட 100 படங்கள் வெளியானது. அதில் எட்டு படங்கள் மட்டுமே வெற்றியைப் பெற்றிருக்கிறது. அஜித்தின் குட் பேட் அக்லி, மணிகண்டனின் குடும்பஸ்தன், விஷாலின் மதகஜ ராஜா, பிரதீப் ரங்கநாதனின் டிராகன் ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது.

அதேபோல் சசிகுமாரின் டூரிஸ்ட் ஃபேமிலி, சூரியன் மாமன், விக்ரமின் வீரதீர சூரன் படமும் பாக்ஸ் ஆபிஸில் வசூலை பெற்றது. இப்போது தியேட்டரில் வெளியாகி இருக்கும் மெட்ராஸ் மேட்னி படமும் குடும்பங்கள் கொண்டாடும் படமாக அமைந்திருக்கிறது.

இதில் டிராகன் படம் தான் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு அதிக வசூலை கொடுத்திருக்கிறது. மேலும் இந்த வருடம் குபேரா, கூலி, மதராசி, தலைவன் தலைவி, மாரீசன் ஆகிய படங்கள் வெளியாக இருக்கிறது. இவை வெற்றியைக் கொடுக்கிறதா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →