சூர்யாக்கு கல்தா கொடுத்த லோகேஷ் கனகராஜ்.. கூலி ஸ்பாட்டில் அமீர்கான் உடனான நட்பின் அடுத்த லெவல்

கூலி படம் 90 சதவீதம் முடிந்துவிட்டது. சத்யராஜ் நாகார்ஜுனா, உபேந்திரா, அமீர்கான் என ஒரு பெரிய நட்சத்திர பட்டாளத்துடன் டிராவல் செய்து கொண்டிருக்கிறார்கள் ரஜினிகாந்த் மற்றும் லோகேஷ் கனகராஜ். இவ்விடத்தில் தான் அமீர் கான் உடன் மிகவும் நெருங்கிய நட்பு லோகேஷிற்கு ஏற்பட்டிருக்கிறது.

தற்போது அமீர்கான் கொடுத்த பேட்டி தான் சமூக வலைதளத்தில் பரவிக் கொண்டிருக்கிறது. அதில் அவர் லோகேஷ் கனகராஜ் உடன் ஒரு படம் பண்ணப் போவதாக கூறுகிறார். மற்ற ஹீரோக்களை போல் இல்லாமல் பல விஷயங்களை வெளிப்படையாக பேசி வருகிறார்அமீர்கான்

இவர்கள் இருவரும் சேர்ந்து ஒரு சூப்பர் ஹீரோ சப்ஜெக்ட் பண்ண போகிறார்கள். லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் படம் எடுக்கும்போது விஜய் இடம் சூப்பர் ஹீரோ சப்ஜெக்டை கூறி இருக்கிறார் ஆனால் இருவரும் சேர்ந்து மாஸ்டர் படத்தை செலக்ட் செய்து முடித்து விட்டனர்.

இப்பொழுது அமீர்கான் உடன் இணைய போவது அந்த படம் தானாம். மேலும் இது அவர் சூர்யாவை வைத்து எடுக்கவிருந்த இரும்புக்கை மாயாவி படம் தான் என்றும் கூறுகிறார்கள். இந்த படத்திற்காக அமீர்கான் ஏற்கனவே அட்வான்ஸ் வாங்கி விட்டாராம். கூடிய விரைவில் இதை ஆரம்பிக்கவிருக்கிறார்கள்.

ஏற்கனவே லோகேஷ் நாகராஜ் சூர்யாவை வைத்து ரோலக்ஸ் படத்தை எடுக்க போவதால் இந்த படத்திற்கு அப்படியே ரூட்டை மாற்றி விட்டார். இதை அமீர்கான் தற்சமயம் அமீர்கான் கொடுத்த பேட்டி ஒன்றில் அவரே வெளிப்படையாகவும் கூறிவிட்டார்.

thenmozhi

Thenmozhi

தேன்மொழி - கடந்த 8 ஆண்டுகளாக சினிமா தொடர்பான செய்திகளை எழுதி வருகிறார். OTT செய்திகள் மற்றும் விமர்சனங்களில் ஆர்வம் கொண்டவர். உண்மையான மற்றும் பயனுள்ள தகவல்களை கொண்டு சேர்ப்பதே இவரின் குறிக்கோள்.

View all posts →