தொலைக்காட்சி

அதல பாதாளத்திற்கு சென்ற சிங்கப்பெண்ணே.. தயவு செய்து முடிச்சு விட்டுடுங்க டைரக்டர் சார்!

By Arun · 13 ஜூன் 2025
Singapenne promo

Singapenne: சன் டிவியின் சிங்க பெண்ணே சீரியல் ரசிகர்கள் புலம்பி தவிக்கும் அளவுக்கு இயக்குனர் கதைக்களத்தை நகர்த்தி வருகிறார். ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் கதையே வேண்டாம் என ரசிகர்கள் கோரிக்கை வைத்திருந்தும் தற்போது ஆனந்தியின் கர்ப்பத்தை வைத்து தான் கதை நகர்ந்து கொண்டிருக்கிறது.

மேலும் ஆனந்தி தனக்கு நடந்ததை அன்புவிடம் சொல்லி அதன்பிறகு அன்பு என்ன முடிவெடுத்தாலும் சரி என்பது தான் ரசிகர்களின் எதிர்பார்ப்பு. ஆனால் ஆனந்தி என்ன நடந்தது என்பதை மறைத்து அன்புவை காயப்படுத்திக் கொண்டிருக்கிறாள்.

அதல பாதாளத்திற்கு சென்ற சிங்கப்பெண்ணே

மேலும் ஒவ்வொரு வாரமும் அவளிடம் ஒரு ஆதாரம் கிடைப்பது போல் காட்டப்பட்டு பின்னர் அது ஒன்றும் இல்லாமல் போகிறது. புதுசாக உள்ளே வந்த துளசியும் நமத்துப்போன பட்டாசாக ஆகிவிட்டாள். இந்த வாரம் அரவிந்தை அதிகமாக எதிர்பார்த்து அவனும் சைலன்ட் மோடில் தான் இருக்கிறான்.

இன்னொரு பக்கம் கோகிலாவின் கல்யாணம், மித்ரா மகேஷ் கல்யாணம், வாணியிடம் இருக்கும் நகை என அடுத்தடுத்து இடியாப்ப சிக்கலை தான் இயக்குனர் உருவாக்கிக் கொண்டிருக்கிறார். ஆனந்தியின் கர்ப்பம் உடனடியாக தெரிந்து அதற்கான முடிவை நோக்கி சீரியல் பயணிக்க வேண்டும்.

அல்லது ஆனந்தி கர்ப்பமாக இல்லை மருத்துவ பரிசோதனை தவறானது என்று வரவேண்டும் என்பதுதான் நேயர்களின் விருப்பம். அரைத்த மாவையே அரைத்து எதற்கு இந்த சீரியலை பார்த்தோம் என மக்கள் டென்ஷன் ஆகும் அளவிற்கு கடந்த ஒரு மாதமாக சீரியல் அறுத்துக் கொண்டிருக்கிறது.

போகிற போக்கில் சிங்கபெண்ணே சீரியல் மொத்த டிஆர்பியையும் தவறவிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. தற்போது அன்பு மருத்துவமனையில் இருப்பது போல் காட்டப்படுவதால் சீரியலை வெறுத்துப் போய் விட்டார்கள் என்று தான் சொல்ல வேண்டும். ரசிகர்களின் எதிர்பார்ப்பை கருத்தில் கொண்டு இயக்குனர் கதைக்களத்தை மாற்றுவாரா என பொறுத்திருந்து பார்க்கலாம்.