பண ருசி கண்ட இளையராஜா.. தயாரிப்பாளர்களை மிரட்டி காசு பார்க்கிறாரா இசைஞானி.?

Ilaiyaraaja: இப்போதெல்லாம் பழைய பாடல்களை பயன்படுத்துவது ஒரு ட்ரெண்டாக மாறிவிட்டது. அப்போதுதான் ரசிகர்களை தியேட்டருக்கு வரவைக்க முடியும் என இயக்குனர்கள் பலே பிளான் போடுகின்றனர்.

அதில் பலரும் தேர்ந்தெடுப்பது இளையராஜாவின் பாடல்களை தான். பிரச்சினை வரும் என்று தெரிந்தே கூட இதை ஒரு பிரமோஷன் ஆக சிலர் பயன்படுத்துவது உண்டு.

ஆனால் பிற பாடல்களை அனுமதி இல்லாமல் எப்படி பயன்படுத்த முடியும் என்ற கேள்வி இருக்கிறது. உண்மையில் அந்த பாடல்களின் உரிமையை வைத்திருக்கும் நிறுவனத்திடம் அனுமதி பெற்று அதற்கான பணமும் கொடுத்துதான் தயாரிப்பாளர்கள் பாடலை பயன்படுத்துகின்றனர்.

பண ருசி கண்ட இளையராஜா

ஆனால் இளையராஜா விஷயத்தில் அப்படி கிடையாது. நீங்கள் எங்கு அனுமதி வாங்கினீர்களோ அவர்களுக்கே நான் அந்த உரிமையை கொடுக்கவில்லை என்று கரராக சொல்கிறாராம்.

மஞ்சுமல் பாய்ஸ் படம் வந்த போது கூட இதுதான் நடந்தது. இப்படி சொல்லியே கிட்டத்தட்ட 60 முதல் 80 லட்சம் வரை இசைஞானி காசு வாங்கியிருப்பதாக வலைப்பேச்சு பிரபலம் பிஸ்மி தெரிவித்துள்ளார்.

அது மட்டும் இன்றி இதன் மூலம் அவர் நன்றாக ருசி கண்டுவிட்டார். அதனால் தயாரிப்பாளர்களை இதை சொல்லி மிரட்டியே காசு பார்ப்பதாக ஒரு தகவலை அவர் கூறியுள்ளார்.

இருந்தாலும் சம்பந்தப்பட்டவர்கள் இந்த விஷயத்தில் அமைதியாக இருப்பதில்லை. வெளியில் தெரியவில்லை என்றாலும் சட்ட ரீதியான நடவடிக்கைகள் சென்று கொண்டு தான் இருக்கும் என்றும் பிஸ்மி குறிப்பிட்டுள்ளார்.

vijay-founder-of-cinemapettai

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.

View all posts →