வேல்முருகனின் சர்ச்சை பேச்சுக்கு மாணவியின் பதிலடி.. விஜய்யின் ரியாக்ஷன் என்ன.?

TVK-Vijay: நல்ல மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவியருக்கு விஜய் ஒவ்வொரு ஆண்டும் ஊக்கத்தொகை கொடுத்து கவுரவித்து வருகிறார். அப்படித்தான் இந்த வருடமும் அந்த நிகழ்வை அவர் நடத்தியுள்ளார்.

அப்போது வழக்கம் போல மாணவ மாணவிகளை தோளோடு அனைத்து அவர் போட்டோவுக்கு போஸ் கொடுத்தார். ஆனால் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் அதை கொச்சையாக பேசியது சர்ச்சையாக மாறி இருக்கிறது.

இது இப்போது வரை பரப்பரப்பை கிளம்பி வருகிறது. இந்த சூழலில் தற்போது மூன்றாம் கட்டமாக இந்த நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அப்போது மேடையில் பேசிய மாணவி இந்த சர்ச்சைக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

விஜய்யின் ரியாக்ஷன் என்ன.?

இந்த விருது வழங்கும் விழா குறித்தும் மாணவிகள் குறித்தும் சில வீடியோக்கள் பரவி வருவதை நான் பார்க்கிறேன். உண்மையில் நாங்கள் எப்படி உணர்கிறோம் என்றால் விஜய் எங்களுக்கு அப்பா, அண்ணன், உயிர் மாதிரி.

அப்படித்தான் நாங்கள் நினைக்கிறோம். இதுவே உங்க குடும்பத்தில் இருந்தால் இப்படி எல்லாம் பேசுவீங்களா. இனிமேல் இந்த மாதிரி எல்லாம் யாரும் தப்பா பேச வேண்டாம் என அந்த மாணவி பேசியுள்ளார்.

இதற்கு அந்த அரங்கமே கைத்தட்டி ஆரவாரம் செய்தது. அதேபோல் இறுதியில் அந்த மாணவி விஜய் அப்பாவுக்கு நன்றி என கூறினார். உடனே தளபதி மாணவியை தோளோடு அனைத்து தட்டிக் கொடுத்தார்.

இந்த வீடியோ தற்போது வைரலாகி வரும் நிலையில் டி வி கே தொண்டர்கள் வேல்முருகன் கேட்டுச்சா என ட்வீட் போட்டு வருகின்றனர். இணையவாசிகளும் இப்படி ஒரு பதிலடி தேவைதான் என சப்போர்ட் செய்து வருகின்றனர்.