சிங்கப்பெண்ணில் கடந்த காலத்தை மறக்கும் அன்பு?. ஆனந்திக்கு வச்ச பெரிய ஆப்பு

Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியல் இன்றைய ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அன்பு வேண்டவே வேண்டாம் என்று சொல்லி ஆட்டம் போட்டுக் கொண்டிருந்த ஆனந்திக்கு சர்வமும் ஒடுங்கிப் போகும் அளவுக்கு சம்பவம் நடந்திருக்கிறது.

அன்பு சண்டை போடும் போது தலையில் அடிபட்டு மருத்துவமனையில் இருக்கிறான். அன்புவை எப்படியாவது பார்த்து விட வேண்டுமென ஆனந்தி தவியாய் தவிக்கிறாள்.

கடந்த காலத்தை மறக்கும் அன்பு

ஆனால் அன்புவின் அம்மா இனி அன்புவை நீ தேடி வரவே கூடாது, எங்களையும், என் மகனையும் பார்த்ததையே நீ மறந்துவிட வேண்டும் என ஆனந்தியிடம் கராராக பேசி விடுகிறார். இவ்வளவு நாள் அன்பு ஆனந்தியை தேடி வரும்போது எல்லாம் அவள் அவனை உதாசீனப்படுத்தினாள்.

ஆனால் தற்போது அவளே தேடி வந்தாலும் அவளை கண்டுகொள்ள முடியாத அளவுக்கு அன்புவின் நிலைமை மாறிவிட்டது. அன்பு தலையில் அடிபட்டு மருத்துவமனையில் இருப்பதால் அடுத்த கதை களத்தில் அவன் கடந்த காலத்தை மறந்தது போல் காட்டுவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது.

இல்லை என்றால் ஆனந்தி அன்புவை நினைத்து ஏங்கி அவனைத் தேடி வர வேண்டும் என்பதற்காக பழசை மறந்த மாதிரி திட்டமிட்டு நடிக்கவும் வாய்ப்பு இருக்கிறது.

இந்த சூழ்நிலையில் அன்பு, துளசியுடன் நெருங்கி பழகுவதை பார்த்து வை தேடி வந்து நடந்து உண்மையை சொல்வாள். ஆனந்திக்கு எதிராக திரண்டு இருப்பவர்கள் அனைவரும் சேர்ந்து அன்புடன் துணை நின்று இந்த இருவரையும் சேர்த்து வைக்கிறார்களா என பொறுத்திருந்து பார்க்கலாம்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →