நாற்பதை தாண்டிய நாயகர்கள்.. காதல் கதைகளில் தட்டுப்பாடு

Failure movies reason : சமீபகாலமாக தமிழ் சினிமாவில் அதிகம் கேங்ஸ்டர் கதைகள் தான் உருவாகி வருகிறது. ஒரே மாதிரியான கதை தொடர்ந்து வருவதால் ரசிகர்களுக்கு அலுப்பு தட்டி விடுகிறது. இதற்கான காரணம் என்ன என்று ப்ளூ சட்டை மாறன் கூறி இருக்கிறார்.

அதாவது இப்போது உள்ள ஹீரோக்கள் எல்லோருக்கும் 40 வயதை கடந்து விட்டனர். இதனால் பல ஆண்டுகளாக கொடி கட்டி பறந்த காதல் படங்களுக்கு இப்போது தமிழ் சினிமாவில் பஞ்சம் ஏற்பட்டு இருப்பதாக பதிவு போட்டிருக்கிறார்.

அதாவது ரஜினிக்கு 75, கமலுக்கு 71, விக்ரமுக்கு 60 வயதாகிறது. அதேபோல் பிரசாந்த், விஜய், சூர்யா, சசிகுமார், கார்த்தி, விஜய் சேதுபதி, சிம்பு, தனுஷ் போன்றோர் 40 வயதுகளை கடந்து விட்டனர். ஆகையால் இப்போது தாதா மற்றும் அங்கிள்களின் ஆதிக்கம் பாலிவுட் மற்றும் தெலுங்கு சினிமாவில் உள்ளது.

பெரிய நடிகர்களின் தோல்விக்கான காரணம்

ஆகையால் இப்போது இளைய தலைமுறையினரை கவரும் வகையில் புதிய மற்றும் குடும்பம் சார்ந்த கதைகள் வருவது சொற்பம் தான். பெரும்பாலான நடிகர்கள் கேங்ஸ்டர் மற்றும் டான் கதைகளில் நடிக்கவே விரும்புகிறார்கள். இது ரசிகர்களுக்கு சலிப்பு தட்டவே இது மாதிரியான படங்கள் தோற்று வருகிறது.

சமீபத்தில் வெளியான கங்குவா, தக் லைஃப் போன்ற படங்களின் தோல்விக்கு காரணம் இதுதான் என சினிமா விமர்சகர் சக்தி தேஷ்பாண்டே கூறியிருக்கிறார். அதேபோல் இப்போது மணிகண்டன் காதல் படங்கள் மற்றும் குடும்ப கதைகளில் நன்றாக நடித்து வருகிறார்.

அவருடைய படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கிறது. எதார்த்தமான லப்பர் பந்து படத்திற்கும் ரசிகர்கள் ஆதரவு கொடுத்து இருந்தனர். ஆகையால் இளம் நடிகர்களின் வருகை தான் தமிழ் சினிமாவிற்கு இப்போது தேவையாக இருக்கிறது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →