அரவிந்த் மூலம் ஏற்பட போகும் டிவிஸ்ட்.. சிங்கப்பெண்ணே சீரியலின் அடுத்தகட்ட கதைக்களம் இதுதான்

Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலின் அடுத்த கட்ட நகர்வு எப்படி இருக்கும் என்பது தான் தற்போது ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு. இதற்கு காரணம் ஆனந்தியின் கர்ப்பம் தான். ஆனந்தி மற்றும் அன்புவின் காதலை மகேஷ் எவ்வாறு ஏற்றுக் கொள்கிறான்.

இவர்களுடைய திருமணம் எப்படி நடக்க இருக்கிறது என்று தான் ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால் இயக்குனர் மிகப்பெரிய ட்விஸ்ட்டாக ஆனந்தியின் கர்ப்பத்தை எடுத்து வந்திருக்கிறார்.

அரவிந்த் மூலம் ஏற்பட போகும் டிவிஸ்ட்

மேலும் இந்த விஷயம் அன்புக்கு தெரியாமல் இருக்க ஆனந்தி அவனை வெறுத்து ஒதுக்குவது எல்லாம் சீரியலின் உச்சகட்ட நெகட்டிவ். கதைகளம் ஏற்கனவே ரொம்ப நீர்த்து போய்விட்டது என்று சொல்லலாம்.

இந்த ஆட்டத்தை அடுத்து சூடு பிடிக்க வைக்க அரவிந்த் மூலம் ட்விஸ்ட் வர இருக்கிறது ஒரு பக்கம் மித்ராவின் அம்மா சத்தியவதி மித்ராவை உனக்கு திருமணம் செய்து வைக்க மாட்டேன் என அரவிந்திடம் சொல்லிவிட்டார்.

இன்னொரு பக்கம் கம்பெனியில் இருக்கும் அத்தனை பேரின் மருத்துவரை போட்டும் அரவிந்த் கைக்கு தான் முதலில் வந்தது. இதை வைத்து அரவிந்த் மித்ராவை தலையாட்டும் பொம்மையாக மாற்ற இருக்கிறான்.

அரவிந்த் முலம் தான் மித்ரா ஆனந்தி மற்றும் அன்புவுக்கு எதிராக என்னவெல்லாம் செய்தாள் என்பது மகேஷுக்கு தெரியவரும்.

அதே நேரத்தில் ஆனந்தி நிஜமாகவே கர்ப்பமாக இருக்கிறாளா அல்லது இதற்கு பின்னால் வேறு ஏதும் சதி இருக்கிறதா என கிளைமாக்ஸ் காட்சியில் தான் தெரிய வரும்.

இதைத்தொடர்ந்து அன்பும் ஆனந்தியும் கைகோர்த்து ஒன்றாக சேரப் போகிறார்கள். தான் காதலித்த பெண்ணின் காதலை சேர்த்து வைக்க மகேஷ் போராடுவதை பார்த்து துளசி அவன் மீது காதல் வயப்பட போகிறாள். ரசிகர்கள் ஏற்கனவே எதிர்பார்த்தது போல தான் அன்பு -ஆனந்தி, மகேஷ் – துளசி ஜோடி சேர இருக்கிறார்கள்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →