கைதி 2-வில் அனுஷ்காவா.? வெளியான உண்மை நிலவரம்

Anushka : லோகேஷ் கனகராஜ், கார்த்தி நடிப்பில் வெளியான கைதி படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் கதாநாயகி மற்றும் பாடல்கள் இடம் பெறவில்லை. ஆனாலும் படம் ஹிட்டடித்தது லோகேஷின் டைரக்ஷன் என்று பலராலும் பேசப்பட்டு வந்தது.

இப்போது லோகேஷ் கூலி படத்தை எடுத்து வரும் நிலையில் அடுத்ததாக கைதி 2 படத்தை எடுக்க உள்ளார். இதில் கார்த்திக் கதாநாயகனாக நடிக்க உள்ள நிலையில் அனுஷ்காவை நடிக்க வைக்க படக்குழு அனுப்பியதாக தகவல் வெளியாகி இருந்தது.

ஏற்கனவே கார்த்தி உடன் இணைந்து அலெக்ஸ் பாண்டியன் படத்தில் அனுஷ்கா நடித்திருக்கிறார். மீண்டும் இந்தக் கூட்டணி இணைய உள்ளதா என்று ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்தது. இதுகுறித்து அனுஷ்கா தரப்பில் இருந்து இப்போது பதில் வந்துள்ளது.

கைதி 2 வில் அனுஷ்கா நடிக்கிறாரா என்ற தகவல் வெளியாகி இருக்கிறது

அதாவது கைதி 2 படத்தில் அனுஷ்கா பெண் தாதாவாக நடிக்க உள்ளதாக தகவல் பரவி வருகிறது. அவ்வாறு படக்குழு தரப்பிலிருந்து அனுஷ்காவை யாரும் அணுகவில்லை என்று அவரது நெருங்கிய வட்டாரத்தில் உள்ளவர்கள் கூறுகின்றனர்.

ஆகையால் கைதி 2 படத்திலும் கதாநாயகி இல்லாமல் தான் படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இதில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் சூர்யா நடிக்க இருப்பதை கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.

ஒரே திரையில் சூர்யா மற்றும் கார்த்தி இருவரும் மோதிக்கொள்ள இருக்கின்றனர். அதுமட்டுமின்றி படத்தில் இன்னொரு சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் கமல் விக்ரம் கேரக்டரில் வர இருக்கிறார்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →