‘வாழுறதுக்காக தான் பொழைக்குறதே’.. தனுஷ்-நாகார்ஜுனா மிரட்டி விட்டிருக்கும் குபேரா ட்ரெய்லர்

Dhanush: கோடி, கோடின்னு சொல்லுறீங்களே அப்படின்னா எவ்வளவு காசு என்று குழந்தைத்தனமாக தனுஷ் கேட்கும் வசனத்தோடு ஆரம்பிக்கிறது குபேரா ட்ரெய்லர்.

இந்த ட்ரெய்லர் சொல்லும் கதையிலேயே நாகார்ஜுனாவை சுற்றி கதை வருவதும், அவருக்கு ஏதோ ஒரு விதத்தில் பிச்சைக்காரனாக இருக்கும் தனுஷ் கருவியாக மாறுகிறார் என்பதும் தெரிகிறது.

குபேரா ட்ரெய்லர்

காசு தான் இங்க அரசாங்கத்தையே நிர்ணயிக்கிறது என வெறுப்புடன் பேசுகிறார் நாகார்ஜுனா. நாகார்ஜுனாவின் மனைவியாக சுனைனா நடித்திருக்கிறார். அதேபோன்று ராஷ்மிகா தனுஷ் உடன் பயணிக்கும் கேரக்டர்.

விதிவசத்தால் நாகார்ஜுனா மூலம் திடீர் கோடீஸ்வரனாக உருவெடுக்கிறார் தனுஷ். அதன் பின்னர் அவருக்கு அதிலிருந்து ஏற்படும் பிரச்சனை, ராஷ்மிகா அவருடனே இருந்து அவரை காப்பாற்ற நினைக்கிறார். ஒரு கட்டத்தில் ஓடி ஒளியாமல் தனுஷ் எதிர்த்து நிற்பது போல் இந்த வீடியோ இருக்கிறது.

பிச்சைக்காரனுக்கு எல்லாம் எங்க சார் அட்ரஸ் இருக்கு என வரும் வசனம் அதன் பின்னர் தனுஷ், இந்த உலகம் அவங்களுக்கானது மட்டுமில்ல என்னோட உலகமும் இதுல தான் இருக்கு என்று பேசும் வசனமும் பெரிய அளவில் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

அதே மாதிரி ஒரு இடத்தில் நான் பொழச்சு என்ன பண்றது என ராஷ்மிகா கேட்பார். அதற்கு தனுஷ் வாழ்வதற்காக தான் மேடம் பொழைக்கணும் என அழுத்தமாக ஒரு வசனம் பேசி இருக்கிறார்.

ஒரு பிச்சைக்காரன் கவர்மெண்டையே ரிஸ்கில் கொண்டு வந்து விட்டிருக்கிறான் என வில்லன் பேசும் வசனம் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்திருக்கிறது.

விருதுகளை குவித்த இயக்குனர் சேகர் கமுலா இயக்கத்தில் நாகார்ஜுனாவின் கிளாஸ் மற்றும் தனுஷின் அரக்கத்தனமான நடிப்பில் தான் இந்தியா படமாக உருவாகியிருக்கும் குபேரா வரும் ஜூன் இருபதாம் தேதி ரிலீசுக்கு தயாராக இருக்கிறது.