தொலைக்காட்சி

கௌரவத்திற்காக தர்ஷனை கொல்ல சொல்லும் ஆதி குணசேகரன்.. மருமகள்கள் காப்பாற்றுவார்களா?

By Vijay · 17 ஜூன் 2025 · Updated 17 ஜூன் 2025
Adi Gunasekaran asks his son Darshan to be killed for his honor... Will the women save Darshan?

Sun Tv: சன் டிவியில் வெற்றிகரமாக சென்றுக்கொண்டிருக்கும் எதிர்நீச்சல் சீரியலில். ஆண்கள் அணிக்கும் பெண்கள் அணிக்கும் நடைபெறும் சவால்கள் நிறைந்த மோதல்களை மையப்படுத்தி கதைக்களத்தை அருமையாக நகர்த்தி கொண்டு செல்கிறார் இயக்குனர்.

ஒவ்வொரு பிரச்சனையாக எழுந்து அடுத்தடுத்து அதை தகர்த்து தரைமட்டமாக்கும் பெண்கள், தற்பொழுது எழுந்துள்ள பிரச்சனையும் சரி செய்வார்களா?

தர்ஷன் ஆதி குணசேகரனிடம் பேசுவதற்காக சென்றுள்ளார் . அப்போது ஆதி குணசேகரன் தர்ஷனை முதலில் பேச விடாமல். தர்ஷன் திருமணத்திற்காக தயார் செய்து வைத்திருக்கும் பத்திரிக்கையை தர்ஷன் கைகளில் கொடுக்கிறார்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த தர்ஷன் எதுவும் சொல்லாமல் மேலே சென்றுள்ளார் . அங்கே தன் அம்மா ஈஸ்வரிடம் எனக்கு இந்த திருமணத்தில் விருப்பமில்லை என்று கூறுகிறார். அதற்கு ஈஸ்வரி இதை உன் அப்பாவிடம் நீ கூற வேண்டும் என்று சொல்கிறார்.

உடனே தர்ஷன் கூறுவதற்கு எனக்கு பயமாக இருக்கிறது என்று கூறுகிறார் . ஜனனி சக்தியை அழைத்து வருமாறு கூறுகிறார் . உடனே சக்தி தர்ஷனிடம் சொல்லு தர்ஷா என்று கேட்டுள்ளார். அதற்கு தர்ஷன் எனக்கு இந்த திருமணத்தில் விருப்பமில்லை சித்தப்பா என்று கூறுகிறார்.

இதைக் கேட்டு கோபமடைந்த சக்தி இப்போ வந்து கூறுகிறாயே என்று தர்ஷனிடம் கோபமாக பேசுகிறார் . ஏன் எதற்கு என்று சக்தி கேட்டதற்கு அறிவுக்கரசி தங்கை அன்புவிற்கு போதுமான மெச்சூரிட்டி இல்லை அதனால் எனது வாழ்க்கையை நான் அவளுடன் பங்கு போட்டு வாழ முடியாது என்று தர்ஷன் கூறுகிறான்.

மகனை கொல்ல சொல்லும் ஆதி குணசேகரன்

பிறகு தர்ஷனை கீழே அழைத்து வந்து ஆதி குணசேகரனிடம் பேச சொல்கிறார் சக்தி . தர்ஷன் தன் அப்பா ஆதிகுணசேகரனிடம் திருமணத்திற்கு விருப்பமில்லை என்று கூறுகிறான்.

இதைக் கேட்டு கோபம் அடைந்த குணசேகரன் தர்ஷனை அடித்து கீழே தள்ளி , எப்படியாவது இந்த திருமணத்தை தர்ஷன் செய்து கொள்ள வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறார் . இல்லையென்றால் அவனை கொன்றுவிடு என கதிரிடம் பொறுப்பை ஒப்படைக்கிறார்.

உடனே ஈஸ்வரி தர்ஷன் மீது எல்லா உரிமையும் எனக்கு மட்டும்தான் இருக்கிறது. அவனுக்கு விருப்பமில்லாத இந்த திருமணத்தை நான் செய்து வைக்க விட மாட்டேன் என கதிரிடம் கூறுகிறார் .

இதைக் கேட்டு ஆத்திரமடைந்த கதிர் நந்தினியை அடித்து கீழே தள்ளுகிறார் . பெண்கள் மீது உள்ள கோபத்தை தன் மனைவியிடம் காட்டுகிறார் கதிர் .திரும்பவும் எதிர்நீச்சல் சீரியலில் போராட்ட களம் தொடங்கிவிட்டது.

இப்போது ஈஸ்வரி ,ரேணுகா, நந்தினி மற்றும் ஜனனி ஆகியோர் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட ஹோட்டல் ஆர்டரில் சாதித்து காட்டுவார்களா ? திருமணத்தை தடுத்து தர்ஷனை காப்பாற்றுவார்களா ? பெண்கள் அணியினருக்கு சக்தி துணையாக இருப்பானா ?

கதிர், ஞானம் ஆகியவர்கள் புதிய தொழிலை தொடங்குவார்களா ? ஆதி குணசேகரன் மற்றும் அறிவுக்கரசியின் கோபம் பார்க்கவியை பாதிக்குமா ? என இத்தனை கேள்விகளுக்கும் இந்த வார எபிசோடில் பதில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.