ஜெயிலர் 2-ல் அட்லீயின் ஹீரோவா.? அப்படியே பல்ஸு கிளப்பும் ட்விஸ்ட்!

Jailer 2 : நெல்சன், ரஜினி கூட்டணியில் வெளியான ஜெயிலர் படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. சன் பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரித்த நிலையில் நல்ல லாபத்தை கொடுத்தது. ஜெயிலர் கிளைமேக்ஸ் காட்சியிலேயே இரண்டாம் பாகம் வருவதை நெல்சன் உறுதி செய்திருந்தார். 

ரஜினி அடுத்ததாக லோகேஷின் கூலி படத்தில் நடித்து வந்தார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் ஜெயிலர் 2 தொடங்கிவிட்டது. இதில் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு மற்றும் பல பிரபலங்கள் நடித்து வருகிறார்கள்.

மேலும் கூலி படத்தில் நடித்த நாகார்ஜுனாவை இந்த படத்திலும் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இது தவிர அட்லீயின் நாயகன் இடமும் இப்போது ஜெயிலர் குழு பேசி வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 

ஜெயிலர் 2-வில் நடிக்கப் போகும் அட்லீயின் ஹீரோ

அதாவது அட்லீயின் இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் ஆயிரம் கோடி வசூல் செய்த படம் தான் ஜவான். அதோடு அட்லீ விஜய்யின் நிறைய படங்களை இயக்கிய நிலையில் ஜவான் படத்தில் கேமியோ கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க முயற்சி செய்தனர்.

ஆனால் அந்த கூட்டணி அமையாமல் போன நிலையில் ரஜினி, ஷாருக்கான் காம்போ வரும் என நம்பப்படுகிறது. மற்ற மொழியில் உள்ள நடிகர்கள் இப்போது அதிகம் தமிழ் மொழி படங்களில் கேமியோ கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.

அந்த வகையில் ஜெயிலர் 2-வில் ஷாருக்கான் இணைந்தால் அதன் மார்க்கெட் பல மடங்கு உயர்ந்துவிடும். சன் பிக்சர்ஸ் பல கோடி சம்பளம் கொடுத்து ஷாருக்கானை ஜெயிலர் 2 வில் வரவைக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →