அசரவைக்கும் நடிப்பில் அதர்வா.. ரிலீசுக்கு முன்பே வெற்றிவாகை சூடிய DNA

DNA : அதர்வா முரளி பொதுவாக தேர்ந்தெடுக்கப்படும் கதாபாத்திரம் அனைத்துமே வித்தியாசமான முறையில், ரசிக்கும்படியான மற்றும் மக்களிடையே பேசும் கதாபாத்திரமாக மட்டுமே இதுவரை இருந்துள்ளது. தற்போது அதர்வாவின் நடிப்பில் வெளிவந்திருக்கும் டிஎன்ஏ திரைப்படமும், திரைக்கு வருவதற்கு முன்பே கொண்டாடப்பட்டு வருகிறது.

இத்திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. பரபரப்பாக பேசப்பட்டதுடன் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.டிஎன்ஏ திரைப்படத்தில் அதர்வா முரளி மற்றும் நிமிஷா சஜயன் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இந்த படத்தை நெல்சன் வெங்கடேசன் இயக்கியுள்ளார். மற்றும் அதிஷா வினோவுடன் சேர்ந்து திரைக்கதை எழுதியுள்ளார். ஒலிம்பியா மூவிஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது.

இந்த படத்தில் இவர்களுடன் இணைந்து பாலாஜி சக்திவேல், ரமேஷ் திலக், விஜி சந்திரசேகர், சேத்தன், ரித்விகா, சுப்பிரமணியம் சிவா மற்றும் கருணாகரன் ஆகியோர் நடித்துள்ளனர். வழக்கமான கதைக்களத்துடன் இல்லாமல் நடிப்பில் அதர்வா மிரட்டியுள்ளார். படத்தில் அத்துனை நடிகர்களும் போட்டிபோட்டு கொண்டு கொஞ்சம் கூட விறுவிறுப்பு குறையாமல் கொண்டு செல்வது படத்தின் சிறப்பு.

வெற்றிவாகை சூடிய DNA…

முதலில் திரில்லர் படமாக சென்றாலும் , அடுத்த பாதி சென்டிமெண்டாக அனைவரையும் கண்கலங்க வைத்துவிட்டது. நிமிஷா சஜயன் நடிப்பில் மிரட்டியுள்ளார். படத்தில் உள்ள அனைத்து காரணங்களும் மக்களால் ஏற்றுக்கொள்ளக்கூடிய விஷயங்களாகவே உள்ளது. குழந்தையை மையமாக கொண்டு இந்த கதையை அருமையாக எடுத்துள்ளார் இயக்குனர்.

படத்தின் கதையை சஸ்பென்ஸ் ஆகவே வைத்துள்ளது படக்குழு. இத்திரைப்படத்தை பார்த்த அனைவருமே எந்த ஒரு குறையும் சொல்லாமல் திருப்த்தியான கருத்தையே முன்வைத்துள்ளனர். DNA என்ற படத்தின் தலைப்பிற்கு ஏற்ற கதை மற்றும் இதுவரை காணாத புதிய கதை என்பது இத்திரைப்படத்தின் சிறப்பு.

வெற்றிவாகை சூடிய இப்படம், அதர்வா அவர்களை தமிழ்சினிமாவில் அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிமிஷா விஜயனின் நடிப்பு இத்திரைப்படத்திற்கு மிகப்பெரிய சப்போர்ட்டாக இருக்கும் என எதிர்பார்க்கபடுகிறது. இந்த வருடம் வெளியாகி அதிகமான வரவேற்பை பெறப்போகும் படங்களில் DNA படமும் இடம்பெறும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை.