Danush : பல வருட போராட்டத்திற்குப் பிறகு சினிமாவில் தனக்கென்று ஒரு நிலையான இடத்தை பிடித்தவர் தனுஷ்.
சில நாட்களாகவே தனுஷ் நடித்திருந்த “குபேரா” படத்தின் அப்டேட் தினம் தினம் வந்து கொண்டே தான் இருக்கிறது. ஒரு வருடம் கழித்து அதாவது ராயன் திரைப்படத்திற்கு பிறகு தனுஷ் நடிக்கும் இப்படத்தை திரையில் பார்ப்பதற்கு ரசிகர்கள் உற்சாகத்துடன் காத்திருக்கின்றனர்.
கருத்து எப்படி?
சமூக அரசியல் பின்னணியிலான கிரைம் ட்ராமா படத்தில், பணம், அதிகாரம், ஒழுக்கம், மனித நேயம், காதல் என அனைத்து விதமான ரசனைகளையும் கலந்து படத்தை உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் சேகர் கம்முலா.
தனுஷ் நடிக்கும் இந்த குபேரா படத்தின் கருத்து சற்று வித்தியாசமாகத்தான் இருக்கும் என சினிமா வட்டாரம் கூறுகிறது. இதையடுத்து முதல் முறையாக ஜோடி போடும் தனுஷ் மற்றும் ராஷ்மிகா மந்தனாவின் காம்போ படத்திற்கு மேலும் ஒரு விதமான எதிர்பார்ப்பை தூண்டுகிறது.
படத்தில் திடீர் மாற்றம்!
நாளை ஜூன் 20ஆம் தேதி வெளியிடப்படும் குபேரா திரைப்படத்தில் ஒரு சின்ன மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதாவது படத்தின் மொத்த ஓட்ட நேரம் 3 மணி 2 நிமிடம்.
திரையில் படத்தை பார்க்கும் மக்களுக்கு போர் அடித்து விடக்கூடாது என்பதற்காக பட குழு தற்போது 14 நிமிடத்தை குறைத்து 181 நிமிடமாக மாற்றியிருக்கின்றனர். சுமார் படத்தில் இருந்த 19 காட்சிகள் நீக்கப்பட்டது.
நேரத்தை குறைப்பதற்காக திடீரென படத்தில் இருக்கும் சில காட்சிகளை நீக்கி இருப்பது ரசிகர்களின் மத்தியில் படம் நல்லா இருக்குமா? என்ற கேள்வியை எழுப்பி வருகிறது.