இசை வெளியீட்டு விழாவா ரசிகர் மன்ற கூட்டமா.? தனுஷ் பற்ற வைத்த நெருப்பு

Dhanush-Kubera: என்ன எங்க திரும்பினாலும் தனுஷ் பத்தி பேச்சா இருக்குன்னு பார்த்தா எல்லாம் குபேரா புண்ணியம் தான். நாளை வெளியாக இருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது.

அதில் தனுஷ் ரொம்பவும் ஆவேசமாக பேசியிருந்தார். என் ரசிகர்கள் இருக்கும் வரை உங்களால் ஒரு செங்கல கூட எடுக்க முடியாது என ஏகப்பட்ட பஞ்ச் டயலாக்குகள் அவர் பேச்சில் இருந்தது.

அதைத்தான் இப்போது எல்லோரும் கலாய்ந்து வருகின்றனர். இது என்ன இசை வெளியீட்டு விழாவா இல்ல உங்க ரசிகர் மன்ற கூட்டமா.

தனுஷ் பற்ற வைத்த நெருப்பு

எதையும் வெளிப்படையா பேசாம எதுக்கு இப்படி தமாஷ் பண்ணிடு இருக்கீங்க என ப்ளூ சட்டை மாறன் தற்போது தனுஷை கலாய்த்து ட்வீட் போட்டுள்ளார்.

ஒரு பக்கம் தனுஷ் நயன்தாராவை மறைமுகமாக திட்டியதாக பேசுகின்றனர். இன்னொரு பக்கம் சிம்பு அதுவும் இல்லை என்றால் தளபதி இப்படி பல யூகங்கள் இருக்கிறது.

உண்மையில் தனுசுக்கு யார் தான் எதிரி என்று நமக்கே குழப்பம் தான். அவர் மட்டுமல்ல இப்போது எல்லா ஹீரோவும் இசை வெளியீட்டு விழாவில் மைக்கை பிடித்து இப்படித்தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனா இது பாக்குறதுக்கு ரொம்ப க்ரிஞ்சா இருக்கு. இப்படி பேசியே ஒரு மாய வலையை உருவாக்கி ரசிகர்களை வெளியே விடாமல் இந்த ஹீரோக்கள் பார்த்துக்கிறாங்க.

படத்துல பொழுதுபோக்கு இல்லன்னா கூட நீங்க பேசுறது என்டர்டெயின்மெண்டா தான் இருக்கு. அதுவும் தனுஷின் மேடைப்பேச்சு மெனரிசம் எல்லாமே தலைவர் மாதிரி இருக்கு.

இது மக்களுக்கு ஸ்பெஷல் என்டர்டைன்மென்ட் என ப்ளூ சட்டை மாறன் கிண்டல் அடித்துள்ளார். வழக்கம் போல தனுஷ் ரசிகர்கள் அவருக்கு பதில் கொடுத்து வருகின்றனர்.