Dhanush : சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் குபேரா படம் நாளை 5 மொழிகளில் வெளியாக இருக்கிறது. நாகார்ஜுனா, ராஸ்மிகா மந்தனா மற்றும் பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது.
இந்த சூழலில் குபேரா படத்தின் ப்ரீ புக்கிங்கில் இதுவரை 3.5 கோடி மட்டுமே வசூல் செய்ததாக தெரிய வந்திருக்கிறது. படத்தின் பட்ஜெட் மற்றும் எதிர்பார்ப்பை ஒப்பிடும்போது இது மிகவும் குறைவாக இருக்கிறது. ஏனென்றால் தனுஷின் ராயன் படம் 10 கோடிக்கு மேல் ப்ரீ புக்கிங் ஆகி இருந்தது.
மேலும் இன்று அமெரிக்காவில் படம் வெளியாக உள்ள நிலையில் 2000 விற்று இருக்கிறது. ஆனால் தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் தெலுங்கானா பகுதிகளில் டிக்கெட் புக்கிங் சூடு பிடிக்காததற்கு சில காரணங்கள் கூறப்படுகிறது. அதாவது ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் தனுஷ் உணர்ச்சிவசப்பட்டு சில விஷயங்களை பேசி இருக்கிறார்.
குபேரா படத்தின் ப்ரீ புக்கிங் சுமார்
இதற்கு சிலர் ஆதரவு மற்றும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். மேலும் படத்தின் நீளம் 3 மணி நேரம் 15 நிமிடங்களாக இருந்தது. அதன் பிறகு குறைக்கப்பட்டு இரண்டு மணி நேரம் 50 நிமிடங்கள் ஆக்கப்பட்டாலும் இது நீண்ட படமாக தான் இருக்கிறது. ஆகையால் படம் வணிக ரீதியாக வெற்றி பெறுமா என்று விநியோகஸ்தர்கள் தயக்கம் காட்டி வருகிறார்கள்.
அடுத்ததாக குபேரா படத்தின் டிரைலர் தாமதமாக வெளியானது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது. மேலும் தனுஷின் இயக்கத்தில் வெளியான நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படம் கலவையான விமர்சனங்களை பெற்றதால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பை குறைத்து இருக்கிறது.
அதுமட்டுமல்லாமல் ஜூன் 20 அதர்வாவின் டிஎன்ஏ, வைபவின் சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் மற்றும் அமீர்கானின் சித்தாரே ஜமீன் பர் ஆகிய படங்கள் வெளியாகுவதால் போட்டிகள் அதிகமாக இருக்கிறது. இதனால் கூட குபேரா படத்தின் பிரீ புக்கிங்கில் மந்தமாக இருக்க வாய்ப்பு இருக்கிறது. படத்தின் ரிலீசுக்கு பிறக நன்றாக இருந்தால் கண்டிப்பாக அதிக வசூலை ஈட்டும்.