முத்துவேல் மூலம் அரசி பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்த ராஜி.. தங்கமயிலை வெறுக்கும் சரவணன்

Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், தங்கமயில் சொன்ன பொய்யை ஏற்றுக் கொள்ள முடியாத சரவணன், தங்கமயில் இடம் பேசாமல் இருந்தார். இதனால் அம்மா வீட்டில் விட்டுட்டு வந்தார். அதோடு பேசாமலும் இருந்த நிலையில் தற்போது எல்லாத்தையும் சரி செய்யும் விதமாக தங்கமயில் கர்ப்பமாகிவிட்டார்.

இந்த விஷயத்தை சரவணன் இடம் சொல்லிய பொழுது சரவணன் இதுவும் பொய்தானே என்று தங்கமயில் இடம் கேட்டார். அதற்கு தங்கமயில் இதுல யாராவது பொய் சொல்வார்களா, என்னை நம்புங்க உண்மையில் நீங்கள் அப்பாவாகிட்டீங்க என்று சொல்லி நம்ப வைத்து விட்டார். சரவணனுக்கும் சந்தோஷம் ஏற்பட்ட நிலையில் தங்கமயில் சொன்ன பொய்யை முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

அதனால் தங்கமயிலை வெறுக்கும் அளவிற்கு சரவணன் ஒதுங்கிப் போய் தான் வருகிறார். இருந்தாலும் என்னுடைய குழந்தைக்கு ஒரு பொறுப்பான அப்பாவாக இருப்பேன், எப்பொழுது என்ன செய்ய வேண்டும் என்று சொல்லு அதை நான் செய்து கொண்டே வருகிறேன். ஒருவேளை உன் மீது கோபம் போகலாம், அல்லது போகாமலும் இருக்கலாம். ஆனால் என்னுடைய குழந்தை மீது காட்டும் பாசம் உண்மையாக இருக்கும் என்று சொல்லி விட்டார்.

இதனை கேட்ட தங்கமயில் அழுது கொண்டே பீல் பண்ண ஆரம்பித்து விட்டார். பிறகு பாக்கியம் வீட்டிற்கு கிளம்பிய நிலையில் நீ கர்ப்பமாக இருக்கிறாய். இதை வைத்து உன்னுடைய புருஷனை உன் கைக்குள் போட்டுக்கோ, நீ என்ன சொன்னாலும் கேட்கிற மாதிரி மாத்து என்று தங்கமயில் மனசை குழப்பி விட்டு போய்விடுகிறார். அடுத்ததாக கதிரிடம் ராஜி அரியரை கிளியர் பண்ண சொல்கிறார்.

கதிரும் சரி என்று சொல்லிய நிலையில் அரசி பாஸ் பண்ணி அதிகமாக மார்க் எடுத்த விஷயத்தை கேட்டு சந்தோஷப்படுகிறார். இருந்தாலும் குமரவேலு நம் கண் முன்னாடியே எப்படி அரசிடம் நடந்து கொண்டான், இதையெல்லாம் பார்க்கும் பொழுது கஷ்டமாக இருக்கிறது என்று ராஜிடம் கதிர் பீல் பண்ணி சொல்கிறார். உடனே ராஜி, குமரவேலுவை சந்தித்து அரசியை விரும்பி தான கல்யாணம் பண்ணினாய்.

பிறகு ஏன் அரசி கஷ்டப்படும்படி நடந்து கொள்கிறாய், நீ அரசியை ஏதாவது பண்ணினாய் எனக்கும் அது ஆபத்தாக தான் முடியும். நீ அரசி மீது கோபத்தை காட்டினால் நான் எப்படி சந்தோஷமாக வாழ முடியும் என்று சென்டிமென்டாக பேசினார். ஆனால் அந்த செண்டிமெண்ட் எதுவும் குமரவேலுவிடம் செல்லுபடியாகவில்லை. நான் அரசியை கஷ்டப்படுத்தினால் உன்னுடைய வாழ்க்கை பாதிக்கும் என்றால் நிச்சயம் அதை செய்வேன் என்று சொல்கிறார்.

உடனே இந்த குமரவேலுவை சந்தித்து பேசினது வேஸ்ட் என்று முடிவு பண்ணிய ராஜி, முத்துவேலுவை சந்திக்கிறார். அப்பொழுது அரசி சந்தோசமாக இருந்தால் தான் நான் வாக்கப்பட்டு போன குடும்பத்தில் சந்தோஷமாக இருக்க முடியும். நீங்கள் குமரவேலுக்கு சொல்லி புரிய வையுங்கள். உங்களுக்கு என்னதான் என் மீது கோபம் இருந்தாலும் உங்க மனசுக்குள் நான் சந்தோசமாக இருக்க வேண்டும் என்று ஆசை இருக்கும்.

அதனால் அரசி கஷ்டப்படும் படி இனி எந்த ஒரு பிரச்சனையும் நடக்கக்கூடாது. இதற்கு நீங்கள் தான் தீர்வு காண வேண்டும், குமரவேலுவை கண்டித்து வையுங்கள் என்று முத்துவேல் இடம் ராஜி சொல்கிறார். இதனை அடுத்து முத்துவேலுவும் யோசித்துப் பார்க்கிறார். அதனால் இனி அரசிக்கு எந்த பிரச்சினையும் வராது, குமரவேலு தான் அரசிடம் சிக்கி தவிக்கப் போகிறார்.

vijay-founder-of-cinemapettai

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.

View all posts →