விஜய்யின் 51-வது பிறந்தநாள் விழா – திரையரங்குகளில் திருவிழா. ஜூன் 22-ம் தேதி நடிகர் விஜய் தனது 51-வது பிறந்தநாளை கொண்டாட உள்ளார்.
இந்த சிறப்பான நாளை முன்னிட்டு, தமிழ்த் திரையுலகில் மாஸ் கொண்டாடும் வகையில் அவரது டாப் திரைப்படங்கள் திரையரங்குகளில் மீண்டும் ரீ ரிலீஸ் செய்யப்படுகின்றன.
ரீ ரிலீசுக்கு தயாரான 5 சூப்பர் ஹிட் படங்கள்.
மெர்சல் – ஆறு வருடங்களுக்கு முன்பு வெளியான இந்த த்ரில்லர் படம், ஜூன் 20-ம் தேதி முதல் திரையிடப்பட உள்ளது. கத்தி – சமூக கருத்துக்களை மையமாகக் கொண்ட படம், ஜூன் 21-ம் தேதி திரைக்கு வரவுள்ளது. லியோ – சமீபத்திய வித்தியாசமான விஜய் படம், அதே நாளில் திரையிடப்படுகிறது.
மாஸ்டர் – விஜய் , விஜய் சேதுபதி கூட்டணியின் சூப்பர்ஹிட், 21-ம் தேதி ரீ ரிலீஸ். பகவதி – விஜய் எமோஷனல் டிராமா படம், ஜூன் 22-ம் தேதி அவரது பிறந்த நாளில் திரைக்கு வருகிறது.
வெறும் தமிழ்நாடு மட்டுமல்ல – கேரளாவிலும் விஜய் பில்ட்!
ஜூன் 20-ம் தேதி மெர்சல், கத்தி, லியோ, திருமலை போன்ற படங்கள் கேரளா திரையரங்குகளிலும் ரீ ரிலீஸ் ஆக உள்ளன. இது தென்னிந்திய ரசிகர்களிடையே மிகப்பெரிய கொண்டாட்டத்தை உருவாக்கியுள்ளது.
ரசிகர்கள் களைகட்டும் விழா
படங்கள் மீண்டும் திரையரங்குகளில் ஓடும் எண்ணிக்கையும், முன்பதிவுகள் அதிகரித்து வருகின்றன. விஜய் ரசிகர்கள் பல்வேறு நகரங்களில் ஃப்ளெக்ஸ், ஃபைர்வொர்க்ஸ், பேனர்களுடன் பங்குபெற்று விழாவை கொண்டாட உள்ளனர்.
ரசிகர்களுக்கு ரீல் திருவிழா – ரியல் ஹீரோவுக்கு அற்புத வரவேற்பு.
விஜய்யின் பிறந்தநாளை சுற்றி உருவாகும் இந்த திரையரங்க கொண்டாட்டங்கள், அவரது பாக்ஸ் ஆபிஸ் சக்தியையும், மக்கள் மத்தியில் நிலையான புகழையும் மீண்டும் நிரூபிக்கின்றன. தெறி கடந்து மாஸ் வரும் வாரம் – விஜய் ரீ ரிலீஸ் பார்ட்டி பண்ணுங்க.