தொலைக்காட்சி

அண்ணா சீரியலில் சதி திட்டம் தீட்டும் மூவர் கூட்டணி.. வீராவை காப்பாற்ற போகும் பரணி

By Vijay · 20 ஜூன் 2025 · Updated 20 ஜூன் 2025
A trio of conspirators hatch a conspiracy in the Anna serial... Will Bharani save Veera from the web of conspiracy...

Anna : ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் அண்ணா சீரியல். அண்ணன் – தங்கை கதையை மையமாகக் கொண்டு ஒளிபரப்பாகி வருகிறது. அண்ணனின் சூழ்நிலையை புரிந்து கொள்ளும் தங்கைகள், தங்கைகளுக்காக தன் வாழ்க்கையே தியாகம் செய்யத் துணியும் அண்ணன். என சீரியல் ஆரம்பித்த நாட்களில் இருந்து இன்று வரை விறுவிறுப்பு குறையாமல் நகர்ந்து கொண்டிருக்கிறது.

இந்த சீரியலில் சண்முகத்திற்கு எதிரியாக சௌந்தரபாண்டி மட்டும் இருந்து வந்த நிலையில் தற்போது ரத்னாவின் முன்னாள் கணவன் மற்றும் வைஜெயந்தி ஆகிய மூவரும் இணைந்து பெரிய கூட்டணியை அமைத்துள்ளனர். இவர்களின் நோக்கம் சண்முகம் மற்றும் சண்முகம் தங்கைகளை அவமானப்படுத்துவது. இதற்கு மூல காரணமாக இருப்பது எல்லாமே சௌந்தரபாண்டியன் தான்.

ஒவ்வொரு தங்கையாக கரை சேர்க்கும் அண்ணனின் நிலைமையை கண்டு, அண்ணன் சண்முகத்திற்கு பெரிய தங்கை ரசிகர்கள் கூட்டமே உள்ளது. சண்முகத்தின் தங்கைகளான ரத்னா,இசக்கி,வீரா மற்றும் கனி ஆகியோர் இந்த சீரியலில் அருமையாக நடித்து வருகின்றனர். சண்முகத்தின் மனைவி பரணி இந்த சீரியலில் முக்கியமான ஆணிவேர் என்று கூறலாம்.

தற்போது தனது மூன்றாவது தங்கையான வீராவை வைஜெயந்தி அவரது பையனுக்கு பெண் கேட்டு சண்முகத்தின் வீட்டிற்கு வந்துள்ளார். உடனே சண்முகம் என் தங்கை வீராவை திருமணம் செய்ய வேண்டும் என்றால், எனது கடையில் வேலை பார்க்கும் பையனாக வரவேண்டும் என்று கூறுகிறான். இதை அறிந்த சண்முகத்தின் அத்தை இசக்கியை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வருகிறாள். என் மகன் சிவபாலனுக்கு மட்டுமே நீ வீராவை திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்று கோவமாக சண்முகத்திடம் கூறுகிறாள்.

சண்முகமும் பரணியும் மோதல்..

இதைக் கேட்டுக் கொண்டிருந்த பரணி சண்முகத்திடம் சிவபாலனுக்கு மட்டுமே நீ வீராவை திருமணம் செய்து தர வேண்டும். இல்லையெனில் இந்த திருமணத்தை நான் நடத்த விட மாட்டேன் என சண்முகத்திடம் சவால் விடுகிறாள். இவ்வாறு பேசிக் கொண்டிருக்க எதுவும் புரியாமல் வீரா நின்று கொண்டிருக்கிறாள்.

வீராவிற்காக வைஜெயந்தி விரிக்கும் வலை? சௌந்தர பாண்டியன், ரத்னாவின் முன்னாள் கணவன், மற்றும் வைஜெயந்தி சண்முகத்தை பழி வாங்குவதற்காக செய்யும் சதி திட்டத்திலிருந்து பரணி வீராவை காப்பாற்றுவாளா? வரும் வாரம் எபிசோடுகளில் பார்க்கலாம்.