தனுசுக்கு குடைச்சல் கொடுக்கும் அந்த 3 நடிகர்கள்.. அசுரனாய் மாறிய சிவச்சாமி.

குபேரா ஆடியோ வெளியீட்டு விழாவில் தன் மனதில் உள்ளதை குமுறி தள்ளிவிட்டார் தனுஷ். தொடர்ந்து தன் மீது வன்மத்தை கக்குகிறார்கள். யாருக்கு என்ன பிரச்சனை வந்தாலும் அதற்கு தனுஷ் தான் காரணம் என்று பரப்பும் கூட்டம் ஒன்று இருக்கிறது. இந்தக் கூட்டத்திற்கு எல்லாம் கூடிய விரைவில் முடிவு வரும் என்றெல்லாம் பேசினார்.

அடித்தட்டில் இருந்து வந்தவன் நான், என்னை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது, ஒரு செங்கலை கூட என்னுடைய அஸ்திவாரத்தில் இருந்து உருவ முடியாது என்றெல்லாம் வீர வசனம் கொடுத்தார் குபேரன். இப்பொழுது சக நடிகர்கள் 3 பேர் தான் தனுசுக்கு தொடர்ந்து குடைச்சல் கொடுத்து வருகிறார்கள் என்றெல்லாம் சமூக வலைத்தளத்தில் பேசப்படுகிறது.

சிவகார்த்திகேயன்: ஆரம்பத்தில் இவர்கள் இருவருக்கும் நல்ல நட்பு இருந்து வந்தது ஆனால் ஒரு கட்டத்திற்கு மேல் இருவருக்கும் மோதல் ஏற்பட்டு பிரிந்து விட்டனர். தனுஷ் நடித்த “3” படத்திற்கு பின் இவர்களுக்கு பிரச்சனை வந்தது. இப்பொழுது சிவகார்த்திகேயனின் இணைய கூலிப்படைகள் தொடர்ந்து தனுஷ் படத்திற்கு நெகடிவ் விமர்சனங்களை வாரி தெளிக்கிறார்கள்.

சிம்பு: சிம்புவின் ரசிகர்கள் கூட தனுஷ் மீது தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இப்பொழுது எரிகிற கொல்லியில் எண்ணெய் ஊற்றியது போல் சிம்பு, இயக்குனர் வெற்றிமாறனுடன் கூட்டணி போடுகிறார். இதுவேறு அவர்களுக்குள் பிரச்சனையை பூதாகரமாக்கியுள்ளது. வடசென்னை இரண்டாம் பாகத்தில் சிம்பு நடிக்கிறார் என்ற பேச்சுக்கள் அடிபடுகிறது.

நயன்தாரா: விக்னேஷ் சிவன், நயன்தாரா திருமண ஆவணப்படம் வெளிவந்தது. அந்த படத்தில் தனுஷ் தயாரித்த “நானும் ரவுடிதான்” படக் காட்சிகளை பயன்படுத்தி விட்டனர். இதற்கு முறையான அனுமதி இல்லை என தனுஷ் பிரச்சனை செய்தார். இதனை எதிர்த்து நயன்தாரா தரப்பும் அவருக்கு தொடர்ந்து குடைச்சல் கொடுத்து வருகிறது.

thenmozhi

Thenmozhi

தேன்மொழி - கடந்த 8 ஆண்டுகளாக சினிமா தொடர்பான செய்திகளை எழுதி வருகிறார். OTT செய்திகள் மற்றும் விமர்சனங்களில் ஆர்வம் கொண்டவர். உண்மையான மற்றும் பயனுள்ள தகவல்களை கொண்டு சேர்ப்பதே இவரின் குறிக்கோள்.

View all posts →