சிறகடிக்க ஆசை: குடும்பத்தில் இருக்கும் டுவிஸ்ட்.. திருமண திட்டம் கைகூடுமா

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியல், தற்போது குடும்ப உணர்வுகளையும், நகைச்சுவையையும் ஒரு நல்ல சமநிலையில் கொண்டு செல்கிறது.

பிறந்தநாள் கொண்டாட்டம், மீனாவின் பரபரப்பு, முத்துவின் கிண்டல், மற்றும் திருமண திட்டம் ஆகியவை முக்கியமான திருப்பமாக அமைந்துள்ளது.

ஆரம்பமே அமர்க்களம்..

இன்றைய எபிசோட் தொடக்கத்தில், சிந்தாமணியின் பிறந்த நாள் கொண்டாட்டமாக காணப்பட்டது. அந்த வைபவத்தில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒரே மாதிரியான பாவாடை, தாவணிகளில் தங்களை அலங்கரித்திருந்தனர்.

இதில் விஜயா மற்றும் பார்வதி ஆகியோர் தாவணியில் 20 வயது குறைந்து ஹீரோயின்களாகவே மாறிவிட்டனர். இந்த அணிவகுப்பு மற்றும் கொண்டாட்டம், குடும்பத்தில் ஒரு ஜோஷான சூழ்நிலையை ஏற்படுத்தியது. பார்க்கவே அவ்வளவு அழகாக இருக்கிறது ஆனால் அதனுடன் இப்போது சிறு சிறு மோதல்கள் உருவாகத் தொடங்கியுள்ளது.

வழக்கம்போல் முத்துவின் கிண்டல்..

குடும்பத்தில் எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்க, முத்து தன் வழக்கமான கிண்டல்களை ஆரம்பிக்கிறார். அவர் சொல்வதைக் கேட்டு, மீனா கோபத்தில் தன்னிடம் இருந்த டி வைப்பைப் பாதையில் வீசுகிறார் – இது ஒரு நகைச்சுவை தருணமாக மாறியது. இதனை சமாளிக்க ரோகிணி தைரியமாக விஜயாவுடன் இணைந்து, நிலையை சமாளிக்கிறார்.

திருமண திட்டம் கைவிடுமா?

இதையடுத்து முருகன் மற்றும் சீதா, அருண் இடையிலான திருமணத்திட்டம் கைகூடுமா அடுத்த எபிசோடு விறுவிறுப்பாக தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →