தலையை சுற்றி மூக்கை தொடும் குபேரா.. விஜய் ஆண்டனிக்கு டஃப் கொடுத்த தனுஷ்

மூன்று முறை ரிலீஸ் டேட் அறிவித்து பின் மாற்றப்பட்ட குபேரா படம் இன்று ஒரு வழியாக ரிலீஸ் ஆனது. தனுஷ் மற்றும் நாகார்ஜுனா நடிப்பில் வெளிவந்த இந்த படத்தை தெலுங்கு மற்றும் தமிழ் ரசிகர்கள் வரவேற்றார்களா என்பது தான் இந்த செய்தியில் பார்க்கப் போகிறோம்.

நாகர்ஜுனா மற்றும் தனுஷ் இருவரும் நடிப்பில் மாறி மாறி போட்டி போட்டுள்ளனர். ஒரு கட்டத்தில் இவர் அவரை மிஞ்சுகிறார் அவர் இவரை மிஞ்சுகிறார். நடிப்பை பொறுத்தவரை இரு ஹீரோக்களும் குறை வைக்கவில்லை என்றே சொல்லலாம். ஆனால் திரைக்கதை எப்படி இருக்கிறது என்பதுதான் படத்தை தீர்மானிக்கும்.

இயற்கை வளத்தை சுரண்டுகின்ற கார்ப்பரேட் நிறுவனம் ஒரு லட்சம் கோடி லஞ்சம் கொடுக்க திட்டம் போடுகிறது. அதற்காக நான்கு பிச்சைக்காரர்களை தேர்ந்தெடுத்து பினாமி என்ற பெயரில் அவர்கள் மூலமாக இந்த பணத்தை பரிவர்த்தனை செய்ய முயற்சி செய்கிறது. விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் முதல் பாகம் செல்கிறது.

மொத்தமாய் படம் 3 மணி நேரம் இரண்டு நிமிடங்கள் ஓடுகிறது. முதல் பாதியை விறுவிறுப்பாக கொடுத்தவர்கள் இரண்டாம் பாதியில் கோட்டை விட்டு விட்டார்கள். படத்தின் நீளம் தான் பாதிப்பாக அமைந்துள்ளது. ஒரே கதாபாத்திரத்தை காட்டுவதால் இரண்டாம் பாதி சலிப்பு தட்டுகிறது. பாதி காட்சிகளில் விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் படம் ஞாபகம் வருகிறது.

பெரிய ஆர்டிஸ்ட்கள் கையில் இருந்தும் இயக்குனர் சற்று கோட்டை விட்டுவிட்டார். ராஸ்மிகா மந்தனாவை சரியாக பயன்படுத்தவில்லை. மற்றொரு பிளஸ் பாயிண்ட் ஆக தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசை ரசிகர்களை கட்டி போடுகிறது, தனுஷின் நடிப்புக்காக படம் பார்க்கலாம், மொத்தத்தில் சேகர் கம்லா தெலுங்கு பக்கம் தான் மாஸ் தமிழில் தவறிவிட்டார்.

thenmozhi

Thenmozhi

தேன்மொழி - கடந்த 8 ஆண்டுகளாக சினிமா தொடர்பான செய்திகளை எழுதி வருகிறார். OTT செய்திகள் மற்றும் விமர்சனங்களில் ஆர்வம் கொண்டவர். உண்மையான மற்றும் பயனுள்ள தகவல்களை கொண்டு சேர்ப்பதே இவரின் குறிக்கோள்.

View all posts →