தமிழ் இயக்குனர்களை நம்பி இறங்கிய 4 தெலுங்கு ஹீரோக்கள்.. ஷங்கரால் மண்ணை கவ்விய ராம்சரண்

Shankar : தெலுங்கு ஹீரோக்கள் தமிழ் இயக்குனர்கள் மீது நம்பிக்கை வைத்து சில படங்களில் நடித்திருக்கிறார்கள். அந்த படங்கள் எதிர்பாராத அளவு வெற்றியை பெறாமல் மண்ணை கவ்வி இருக்கிறது. அதில் சில படங்கள் வெற்றியும் கொடுத்திருக்கிறது.

இந்த சூழலில் தமிழ் இயக்குனர்களை நம்பி இறங்கிய நான்கு தெலுங்கு ஹீரோக்கள் யார் என்பதை பார்க்கலாம். மகேஷ் பாபு ஏஆர் முருகதாஸ் மீது நம்பிக்கை வைத்து இறங்கிய படம் தான் ஸ்பைடர். இந்த படம் 2017 ஆம் ஆண்டு வெளியானது.

மேலும் ரசிகர்களிடம் இப்படம் நல்ல வரவேற்பை பெற்று பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற்றது. அடுத்ததாக லிங்குசாமி இயக்கத்தில் ராம் பொதினேனி மற்றும் கீர்த்தி ஷெட்டி ஆகியோர் நடிப்பில் வெளியானது தி வாரியர் படம்.

தெலுங்கு ஹீரோக்களை வைத்து படம் இயக்கிய தமிழ் இயக்குனர்கள்

இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்கள் பெரிய வரவேற்பு பெற்றாலும் படம் நடுநிலையான விமர்சனத்தை பெற்றது. வெங்கட் பிரபு இயக்கத்தில் நாக சைதன்யா நடிப்பில் கஸ்டடி படம் வெளியாகி இருந்தது. இது கலவையான விமர்சனத்தை பெற்றது.

அதோடு போட்ட பட்ஜெட்டை கூட எடுக்க முடியாமல் தோல்வியை தழுவியது. அடுத்ததாக பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவான படம் தான் கேம் சேஞ்சர். ராம்சரண் நடிப்பில் ஷங்கர் இந்த படத்தை இயக்கியிருந்தார். ஒரு பாடலுக்கே பல கோடிகளை வாரி இறைத்தார்.

படம் பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான நிலையில் மண்ணை கவ்வியது. ராம் சரணுக்கு இந்த படம் மிகப்பெரிய தோல்வியை கொடுத்தது. இப்போது பெரும்பாலும் தெலுங்கு ஹீரோக்கள் தமிழ் இயக்குனர்கள் படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்ட தயங்கி வருகிறார்கள்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →