தொலைக்காட்சி

அரசியின் சுயரூபத்தை தெரிந்து கொண்ட சக்திவேல்.. குமரவேலுக்கு குடைச்சல் கொடுக்கும் பாண்டியனின் மகள்

By Vijay · 21 ஜூன் 2025 · Updated 21 ஜூன் 2025
pandian stores 2 (68)

Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், அரசியை கூட்டிட்டு குமரவேல் துணி கடைக்கு போகிறார். அங்கே அரசி இஷ்டப்படி துணிகளை எடுக்க ஆரம்பிக்கும் பொழுது குமரவேலு அங்கு இருந்து நைசா எஸ்கேப் ஆகிவிட்டார். அப்படி வீட்டிற்கு போனதும் சக்திவேலுவிடம் அரசி டிரஸ் எடுத்துக் கொண்டிருக்கிறார். டிரஸ் எடுத்து முடித்ததும் பணம் கொடுக்க முடியாமல் அவமானப்பட போகிறார்.

அந்த அவமானத்தை அரசி பெற வேண்டும் என்பதற்காக நான் அவளை அங்கே தனியாக விட்டுட்டு வந்து விட்டேன் என்று சொல்கிறார். உடனே சக்திவேல் இதெல்லாம் அவளுக்கு ஒரு அவமானமா என்று கேட்கிறார். அதற்கு குமார், இப்படித்தான் சின்ன சின்ன டார்ச்சரை கொடுத்து கஷ்டப்படுத்த வேண்டும் என்று சொல்கிறார். அதோடு மட்டுமல்லாமல் அரசி, குமரவேலுக்கு கொடுத்த குடைச்சலையும் சக்திவேல் இடம் சொல்கிறார்.

அந்த வகையில் தலையில் சாம்பார் ஊற்றி என்னை டென்ஷன் படுத்தியது அரசி தான். வேண்டுமென்று தான் இப்படி பண்ணுகிறார் என்று சக்திவேல் இடம் எல்லா உண்மையும் சொல்லிவிடுகிறார். உடனே சக்திவேல், இந்த அரசி நம்ம நினைக்கிற மாதிரி ஆள் இல்ல. கொஞ்சம் உஷாராக தான் டீல் பண்ண வேண்டும், அரசி செய்ய நினைக்கும் விஷயத்தை டபுள் மடங்காக நாம் கொடுக்க வேண்டும் என்று குமார் இடம் சக்திவேல் சொல்கிறார்.

அந்த சமயத்தில் குமார் மொபைலுக்கு 17 ஆயிரம் ரூபாய் செலவானது மெசேஜாக வருகிறது. இதை பார்த்து அதிர்ச்சியான குமாரு, அரசி தான் கார்டை எடுத்துட்டு போய் செலவு பண்ணுகிறார் என்று சக்திவேலுவிடம் சொல்கிறார். உடனே சக்திவேல், உன்ன மாதிரி ஒரு பிள்ளையை பெற்றதற்கு நான் தான் அவஸ்த படனும் என்று திட்டி விடுகிறார். பிறகு குமாரு, அரசி நிற்கும் கடைக்கு சென்று என்னுடைய கார்டும் பாஸ்வேர்டும் எப்படி தெரிந்தது என்ற கேள்வி கேட்டு சண்டை போடுகிறார்.

ஆனால் அரசி இதற்கெல்லாம் அசராமல் ஏதாவது என்னை தொந்தரவு பண்ணினால் நான் அந்த போலீஸிடம் சொல்லி உன்னை உள்ளே தள்ளிடுவேன் என்று மிரட்ட ஆரம்பித்து விட்டார். பிறகு வேற வழி இல்லாமல் குமாரு, அரிசியை கூட்டிட்டு வீட்டுக்கு கிளம்பி விடுகிறார். அந்த வகையில் அரசி, குமாருடன் ஆசைப்பட்டு இருக்கவில்லை. தொந்தரவு கொடுக்க தான் இருக்கிறார் என்று சக்திவேல், அரசி சுயரூபத்தை புரிந்து கொண்டார்.

அதே மாதிரி குமாரு, அரசி கழுத்தில் தாலி கட்டவில்லை என்ற விஷயமும் வெளிவர வேண்டும். அப்பொழுதுதான் டல்லாக போய்க்கொண்டிருக்கும் இந்த சீரியல் சூடு பிடிக்க ஆரம்பிக்கும்.