சிவகார்த்திகேயனின் அமரனை காலி செய்த குபேரா.. முதல் நாள் வசூலே இப்படியா.?

Dhanush : தனுஷின் நடிப்பில் நேற்றைய தினம் தியேட்டரில் வெளியாகி இருந்தது குபேரா படம். இந்த படத்தின் ப்ரோமோசனே படுபயங்கரமாக நடந்தது. அதுவும் தனுஷ் தன் மனதில் வைத்திருந்த ஆதங்களை கொட்டி தீர்த்துவிட்டார்.

இந்த சூழலில் குபேரா படம் எப்படி இருக்குமோ என்ற சந்தேகத்துடன் தான் வெளியானது. ஏனென்றால் படத்தின் போஸ்டர் மற்றும் டிரைலரில் தனுஷ் பிச்சைக்காரன் போன்ற தோற்றத்தில் இருந்தார். ஆனால் படம் வெளியாகி அமோக வரவேற்பை பெற்று வருகிறது.

அதாவது விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் படத்திற்கு பிறகு ஒரு நல்ல கதை கொண்ட படமாக குபேரா படம் அமைந்திருப்பதாக ரசிகர்கள் கூறி வருகிறார்கள். மேலும் நாகார்ஜுனா மற்றும் ராஷ்மிகா மந்தனா போன்றோரும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றனர்.

சிவகார்த்திகேயன் பட வசூலை முறியடித்த குபேரா

இந்த சூழலில் முதல் நாளே குபேரா படம் கிட்டத்தட்ட 10 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. இதைப் பார்த்து உண்மையிலேயே தனுஷ் ஒரு குபேரா தான் என்று கூறிவருகின்றனர். அதுவும் இந்த வருடம் வெளியான படங்களில் முதல் நாளில் அதிக வசூல் செய்த படமாக இப்படம் இருக்கிறது.

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அமரன் படம் முதல் நாளில் 5 கோடி வசூல் செய்தது. இந்த வருடம் வெளியான அஜித்தின் குட் பேட் அக்லி மற்றும் கமலின் தக் லைஃப் போன்ற படங்கள் இரண்டு கோடியை கூட முதல் நாளில் தாண்டவில்லை.

சூழல் இப்படி இருக்க தனுசுக்கு இது மிகப்பெரிய வெற்றியை கொடுத்திருக்கிறது. அதுவும் வரும் விடுமுறை நாட்களில் வசூலை அள்ள போகிறது. தொடர்ந்து படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் வரும் நிலையில் படத்தின் வசூலில் இது பிரதிபலிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →