Rajini: சமீபத்தில் தனுஷ் ரஜினியை அப்படியே காப்பி அடிக்கிறார் என சர்ச்சையாக பேசப்பட்டது. தனுஷ் என்று இல்லை தமிழ் சினிமாவில் அப்படியே ரஜினியை கண் முன் கொண்டு வரும் அளவுக்கு அவருடைய ஸ்டைலை பாலோ பண்ணும் நடிகர்களும் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட ஐந்து பேரை பற்றி பார்க்கலாம்.
விஜய்: என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிகர்கள், என் நெஞ்சில் குடியிருக்கும் ரசிகர்கள். இது இரண்டிற்கும் பெரிய அளவு வித்தியாசம் எல்லாம் இல்லை.
விஜய் ஆரம்பகால படங்களில் இருந்து சமீபத்திய படங்கள் வரை அவரை அறியாமலேயே அவருக்குள் ரஜினி ஸ்டைல் இருக்கும். ரஜினியின் தீவிர ரசிகரான பிறகு தான் விஜய் ஹீரோ ஆனது இதனால் இவருக்குள் ரஜினி ஸ்டைல் இருப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை.
சிவகார்த்திகேயன்: சிவகார்த்திகேயன் ஆரம்ப காலகட்டத்தில் ரஜினி போல் மிமிக்கிரி செய்தது எல்லோருக்கும் தெரியும். அதனாலேயே அவர் பஞ்சு வசனங்கள் பேசினாலும் சரி, காமெடி பண்ணினாலும் சரி, ஆக்ஷனில் கலக்கினாலும் சரி எதைப் பார்த்தாலும் அப்படியே ரஜினியை பார்ப்பது போலவே இருக்கும்.
தனுஷ்: தனுஷ் ரஜினி ஸ்டைலை காப்பி அடிக்கிறார் என்றெல்லாம் சொல்ல முடியாது. அவர் ஜூனியர் ரஜினி ஆகவே மாறிவிட்டார்.
கங்கா சந்திரமுகி அறைக்கு போனாள், சந்திரமுகியா ஆகவே மாறிவிட்டாள் என்று ரஜினி சொல்வார். அப்படித்தான் தற்போது தனுஷ், ரஜினி ஆகவே மாறிவிட்டார்.
பிரதீப் ரங்கநாதன்: பிரதீப் ரங்கநாதன் சிரிக்கும்போதும், நீண்ட வசனங்கள் பேசும் போதும் தானாகவே அவருக்குள் ரஜினி வந்துவிடுவார்.
பிரதீப் தனுஷ் மாதிரி பண்ணுகிறார் என்று அவர் மீது பேச்சுக்கள் இருக்கிறது. அந்த தனுஷே ரஜினியை காப்பி பண்ணும் போது பிரதீப் ரஜினி ஸ்டைலில் நடிப்பது எந்த தவறும் இல்லை.
ராகவா லாரன்ஸ்: நடன இயக்குனர் மற்றும் நடிகர் ராகவா லாரன்ஸ் தன்னை எல்லா இடத்திலும் ரஜினியின் ரசிகராக தான் அடையாளப்படுத்திக் கொள்கிறார். இவருக்குள்ளும் ரஜினியின் ஸ்டைல் அப்படியே இருக்கும். மேடை ஏறி பேசும் போது கூட ரஜினியை போலவே பேசக்கூடியவர்.
இந்த ஹீரோக்கள் ரஜினியை காப்பி அடிக்கிறார்கள் என்று குற்றமாக சொல்லிவிட முடியாது. இவர்கள் அத்தனை பேருமே ரஜினியை பார்த்து அவருடைய ஆளுமையை உயர்ந்தவர்கள். இவர்களுக்குள் தன்னிச்சையாகவே ரஜினியின் ஸ்டைல் கலந்து விட்டது என்று தான் சொல்ல வேண்டும்.