1. Home
  2. கோலிவுட்

குபேரவால் விரிசலான ராட்சசர்களின் நட்பு.. பெரிய மனுஷன் பாதையை தவறிய தனுஷ், நாகர்ஜுனா

குபேரவால் விரிசலான ராட்சசர்களின் நட்பு.. பெரிய மனுஷன் பாதையை தவறிய தனுஷ், நாகர்ஜுனா

பல போராட்டங்களுக்குப் பிறகு மும்முறை ரிலீஸ் தேதி அறிவித்த பின் மாற்றப்பட்ட குபேரா படம் கடந்த 20 ஆம் தேதி ரிலீசானது. படத்துக்கு ஏக போகமாய் ப்ரோமோஷன் பண்ணினார்கள். தனுஷ், நாகர்ஜுனா, ராஸ்மிகா மந்தனா என ஒரு பெரிய நடிகர் பட்டாளமே இந்த படத்தில் இருந்தது.

தெலுங்கு சூப்பர் ஹிட் இயக்குனர் சேகர் கமுூலா இதை இயக்கியிருந்தார். இந்த படம் ஷூட்டிங் நேரத்திலேயே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அதற்கு காரணம் தனுஷ் மற்றும் நாகார்ஜுனா இருவரும் நடிப்பு ராட்சசர்கள். தங்களுக்குள் போட்டி போட்டு நடித்து வந்தனர்.

பட யூனிட்டில் உள்ள அனைவரும் இவர்களது நடிப்பை பார்த்து மிரண்டனர், போட்டி போட்டு இருவரும் மாறி மாறி ஒருவரை ஒருவர் நடிப்பில் மிஞ்சுகிறார்கள் என்றெல்லாம் இந்த படத்தைப் பற்றிய பேச்சுக்கள் அடிபட்டது. இதனால் குபேரா படத்திற்கு இன்னமும் எதிர்பார்ப்பு அதிகரித்தது.

ஆனால் படம் ரிலீஸ் ஆன பின்பு ரசிகர்களிடையே வரவேற்பை பெறவில்லை. சமீபத்தில் நல்ல ஏறுமுகம் காட்டி வந்த தனுஷிற்கு இந்த படம் இறங்கு முகமாக அமைந்தது. ஒரு பக்கம் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகர்ஜுனா இருந்தும் கூட அங்கே இந்த படம் சோபிக்கவில்லை.

தெலுங்கில் நாகர்ஜுனா இந்த படத்தில் நான் தான் மெயின் ஹீரோ என்றும். தமிழில் தனுஷ் தான் ஹீரோ என்றும் மாறி மாறி ப்ரோமோஷன் செய்தது இதற்கு நெகட்டிவ் ஆக அமைந்தது. இரு தரப்பு ரசிகர்களும் இவர்களது பிரமோசனை நம்பி ஏமாந்து விட்டனர். இப்பொழுது அவர்களும் தங்களுக்கிடையே முட்டி மோதி வருகின்றனர்

Cinemapettai Team
Thenmozhi

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.