நயன்தாராக்கு மட்டும்தான் வில்லன்.. வெற்றிமாறனுக்கு பச்சைக்கொடி காட்டிய தனுஷ்

தனுஷ் வெற்றிமாறன் கூட்டணியில் ஒரு படம் பண்ணுவதற்கு அக்ரிமெண்ட் போட்டு காத்துக் கொண்டிருக்கிறார். இருவரும் பிசியாக இருப்பதால் இந்த படத்திற்கான நேரம் கைகூடி வரவில்லை. தனுஷ் குபேரா முடித்த கையோடு இட்லி கடை படத்தின் வேலைகளை பார்க்க சென்று விட்டார்.

இதனிடையே வெற்றிமாறன், சிம்புவை வைத்து ஒரு படம் பண்ண போகிறார். ஏற்கனவே இந்த படம் வடசென்னை 2 என்ற பேச்சுக்கள் வந்தது ஆனால் இருதரப்பிலிருந்தும் வடசென்னை இரண்டாம் பாகத்தில் தனுஷ் தான் நடிக்க போகிறார், இது வேறு ஒரு கதை என அறிவிப்பு வந்தது.

இதற்கிடையே வெற்றிமாறன் மும்பை செல்ல உள்ளார். அங்கே தனுஷ்சை சந்தித்து “Noc”வாங்க போகிறாராம். கால் சீட் கொடுத்த தனுஷிற்கு இப்பொழுது படம் பண்ண போவதில்லை., சிம்பு ப்ராஜெக்ட் தான் டேக்ஆப் ஆகிறது அதனால் தான் தனுசை பார்க்க செல்கிறார்.

தனுஷ் தரப்பில் இருந்தும் வெற்றிமாறன் என்ன கேட்கிறாரோஅதை கொடுக்குமாறு உத்தரவு போட்டுள்ளாராம். எந்த ஒரு ஆட்சியபனை இன்றி இப்பொழுது சிம்பு வெற்றிமாறன் கூட்டணி உருவாகிறது. ஏற்கனவே நயன்தாரா மற்றும் தனுஷிற்கு தான் இந்த “Noc” பிரச்சனை இருந்து வந்தது.

தனுஷ் தயாரிப்பில் உருவான நானும் ரவுடிதான் படத்தின் காட்சிகளை நயன்தாரா அவருடைய கல்யாண வீடியோவிற்கு பயன்படுத்தி விட்டார் என்று இருவருக்கும் ஒரு பிரச்சனை நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. அது ஒரு பக்கம் இருந்தாலும் தன்னுடைய குருவான வெற்றிமாறனுக்கு தனுஷ் எந்த ஒரு ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை.

thenmozhi

Thenmozhi

தேன்மொழி - கடந்த 8 ஆண்டுகளாக சினிமா தொடர்பான செய்திகளை எழுதி வருகிறார். OTT செய்திகள் மற்றும் விமர்சனங்களில் ஆர்வம் கொண்டவர். உண்மையான மற்றும் பயனுள்ள தகவல்களை கொண்டு சேர்ப்பதே இவரின் குறிக்கோள்.

View all posts →