குபேரா பட இயக்குனரிடம் மாட்டிய அடுத்த ஹீரோ.. தரமான லவ் ஸ்டோரி-யாம்

sekar kammula : தனுஷ் நடித்து “சேகர் கம்முலா” இயக்கி தற்போது வெளிவந்திருக்கும் குபேரா படம் தனுஷ் அவர்களுக்கும் இயக்குனர் “சேகர் கம்முலா”அவர்களுக்கும் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது. இந்த திரைப்படத்தின் வெற்றி தற்போது இயக்குனர் “சேகர் கம்முலா” அவர்களை தரையில் கால் படாமல் மிதக்க வைத்துக் கொண்டிருக்கிறது.

“சேகர் கம்முலா” அவர்கள் அடுத்தடுத்து நிறைய படங்களை இயற்றி நம்மை அசர வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. நல்ல திரைக்கதையும் நல்ல நடிகர்களும் இருந்தாலே பெரும்பாலும் நிறைய படங்கள் வெற்றி பெற்று விடுகின்றன. அந்த வகையில் அனைத்தும் கச்சிதமாக பொருந்தி உள்ளது குபேரா படத்திற்கு.

“குபேரா” பட இயக்குனர் அளித்திருந்த நேர்காணலில் “சேகர் கம்முலா”விடம் காதல் படம் நீங்கள் இயக்குவதாக இருந்தால் யாரை வைத்து இயக்கப் போகிறீர்கள் என்று கேள்வி கேட்டிருக்கிறார்கள். அதற்கு “சேகர் கம்முலா” சற்றும் யோசிக்காமல் “விஜய் தேவர் கொண்டா” அவர்களை வைத்து இயக்குவேன் என பதில் அளித்துள்ளார்.

ஆகையால் “சேகர் கம்முலா” தன் அடுத்த படத்தை விஜய் தேவர் கொண்டாவை வைத்து இயக்கப் போவதாக தெரிகிறது. அதுவும் காதல் கதை என்பதால் விஜய் தேவர் கொண்டாவை தேர்வு செய்தது சரியான தேர்வாக இருக்கும் என்று பேசப்பட்டு வருகிறது. ஏனென்றால் “விஜய் தேவர் கொண்டா” அவர்கள் ஏற்கனவே நடித்த காதல் படம் அனைத்துமே பெரும்பாலும் ஹிட் கொடுத்தவையே.

குபேரா பட இயக்குனரின் அடுத்த ஹீரோ ரெடி

மேலும் “விஜய் தேவர் கொண்டா” குபேரா படத்தின் வெளியீட்டை பார்த்துவிட்டு அவரது கதையில் ஒரு சில மாற்றங்கள் கூறியுள்ளதாகவும் பேசப்படுகிறது. எனவே “விஜய் தேவர் கொண்டா”-விற்கும் “சேகர் கம்முலா” இயக்கத்தில் நடிக்க சம்மதம் எனவே நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.

இது மட்டுமல்லாமல் ஏற்கனவே “சேகர் கம்முலா” இயக்கி வெளியான “லைஃப் இஸ் பியூட்டிஃபுல்” படத்தில் விஜய் தேவர் கொண்டா ஒரு சிறிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்த நடித்திருந்தார். அந்த படைப்பும் அவ்வளவு அழகாக இருந்தது இதனால் “சேகர் கம்முலா” மற்றும் விஜய் தேவர்கொண்டாவின் கூட்டணி, அதுவும் காதல் படம் என்பதால் ரசிகர்களிடையே பெரிய ஆவலை ஏற்படுத்தி உள்ளது.

vijay-founder-of-cinemapettai

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.

View all posts →