Jananayagan : நடிகர் விஜய் நடித்து வெளிவரவிருக்கும் ஜனநாயகன் படத்தின் க்லீம்ஸ் விஜய் அவர்களின் பிறந்த நாளான ஜூன் 22 அன்று வெளியாகி ரசிகர்களை கொண்டாடச்செய்தது. ஒரு நடிகர் என்றாலே அதற்கு இணையான மற்றொரு நடிகருடன் ஒப்பிட்டு ஒரு படத்தை விமர்சனம் செய்வது தமிழ் சினிமாவில் பழகிப்போன ஒன்று.
அந்த வகையில் சிவாஜி – எம்ஜிஆர் , ரஜினி – கமல், அஜித் – விஜய், சிம்பு – தனுஷ் என தொன்றுதொட்டு இந்த வழக்கம் இருந்து கொண்டிருக்கிறது தமிழ் சினிமாவில். ரசிகர்கள் அவரவர் பாணியில் தனக்கு பிடித்த நடிகரை புகழ்வது தெரிந்த ஒன்றே.
புகழ்வது மட்டுமல்லாமல் படத்தில் நடித்த நடிகர் கூட அமைதியாக தான் இருக்கின்றனர் ஆனால் அவர்களின் பெயர்களை சொல்லிக்கொண்டு ரசிகர்கள் பிளவு பட்டு இருக்கின்றனர்.
அந்த வகையில் தற்போது வெளியான “ஜனநாயகன்” பட க்லீம்ஸ் வெளியாகி மக்களிடையே பரபரப்பாக பேசப்பட்டதை அடுத்து, அதாவது அஜித்குமாரின் ரசிகர்கள் “குட் பேட் அக்லி” டீசருடன் இந்த படத்தை ஒப்பிட்டு செய்து வருகின்றனர்.
அட ஏன்டா அடிச்சுக்கிறீங்க..
குட் பேட் அக்லி டீஸர் 15 மணிநேரத்தில் 18.2 மில்லியன் பார்வையாளர்களை சென்று அடைந்துள்ளதாகவும். ஜனநாயகன் “க்லீம்ஸ்” 15 மணிநேரத்தில் 14.8 மில்லியன் பார்வையாளர்களை சென்று அடைந்துள்ளதாகவும் ஒப்பிட்டு வருகின்றனர். அதற்கு விஜய் ரசிகர்கள் அனைவரும் “யார்ரா நீங்க டீசரையும்- க்ளிம்ஸ்” ஒப்பிட்டு போட்டுட்டு இருக்கீங்க, என்று ட்ரோல் செய்து வருகின்றனர்.
இந்த வகையான ரசிகர்கள் ஒருபக்கம் இருக்க விஜய் அவர்கள் அரசியலுக்கு வந்தவுடன், அஜித் ரசிகர்கள் அனைவரும் நடிகர் விஜய்க்கு ஆதரவு தெரிவித்து கொண்டுதான் இருக்கின்றனர்.
இருந்தாலும் படம் என்ற வகையில் அடித்து கொள்கிறார்கள். அதாவது பொதுவாக விஜய் அவர்களை விட்டு கொடுக்க முடியவில்லை, ஆனால் படம் என்று வந்தால் நாங்கள் அடித்துக்கொள்வோம் என கூறுகிறார்கள் போல.
உண்மையை சொல்ல வேண்டுமென்றால், நடிகர் விஜயின் கடைசி படம் என்பதால் அனைத்து நடிகர்களின் ரசிகர்களும் ஒன்று சேர்ந்து இந்த படத்தை கொண்டாடித்தான் வருகின்றனர். தற்போது விஜய் அவர்கள் தமிழ் சினிமாவில் “நோ ஹேட்டர்ஸ்” என்ற நிலையில் அனைவராலும் புகழப்பட்டு வருகிறார் என்றே சொல்லலாம்.
இதுதான் நடிகர் விஜய்-யின் கடைசிப்படம் என்று ஒருபக்கம் பேசப்படுகிறது. இன்னொருபக்கம் இதனின் தொடர்ச்சி உள்ளது எனவும் பேசப்படுகிறது. எதுவாக இருந்தாலும் அதிகாரபூர்வமான அப்டேட் கிடைத்தால்தான் தெரியும்.