இனியாவிற்கு தெரிய வந்த உண்மை.. மகளுடன் கண்ணீர் வடிக்கும் கோபி, பாக்கியா எடுக்கும் முடிவு

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், சுதாகர் பாக்யாவின் ஹோட்டலை அபகரிக்க வேண்டும் என்பதற்காக மட்டும் இனியாவை மகனுக்கு கல்யாணம் பண்ணி வைக்கவில்லை. தவறான பழக்கத்திற்கு அடிமையான மகனுக்கு ஒரு வாழ்க்கை அமைய வேண்டும் என்பதற்காகவும் பாக்கியா குடும்பத்தை ஏமாற்றி இனியாவை தன்னுடைய மருமகளாக கூட்டிட்டு வந்திருக்கிறார்.

அதனால் நித்திஷ் செய்யும் சின்ன சின்ன தவறுகளையும் கோபியும் பாக்கியாவும் கண்டுபிடித்து விடக்கூடாது என்பதற்காக இனியாவிற்கு கொஞ்சம் சுதந்திரம் கொடுக்க ஆரம்பித்தார். முக்கியமாக இனியாவின் பிறந்த நாளை கொண்டாடும் விதமாக வீட்டில் பார்ட்டி வைத்திருக்கிறார். வழக்கம்போல் இனிய ஆஃபீஸ்க்கு கிளம்பிய நிலையில் அங்கே போதைப் பொருளுக்கு அடிமையான விஷயத்தை பற்றி இனியா ஆராய ஆரம்பித்தார்.

அப்பொழுது சுதாகர் பெயர் அடிபட்டதால் அதை இனிய செக் பண்ணி பார்க்கிறார். அப்பொழுது இனியாவிற்கு தெரிந்த உண்மை என்னவென்றால் சுதாகரின் மகன் நித்தேஷ் தவறான பழக்கத்திற்கு அடிமையாகி பிரச்சனையான விஷயத்தை தெரிந்து கொள்கிறார். இதனால் அதிர்ச்சியுடன் வீட்டிற்கு வரும் இனிய எதுவும் சொல்ல முடியாதபடி சுதாகர் வீட்டில் பிரமாண்டமாக பிறந்த நாளை கொண்டாடுவதற்கு ஏற்பாடு பண்ணி வைத்திருக்கிறார்.

அதே நேரத்தில் இனியாவும் இப்பொழுது எதுவும் சொல்ல வேண்டாம் என்று பிறந்த நாளை முடித்துவிட்டு கோபியை தனியாக கூப்பிட்டு நீங்க பார்த்து வச்ச மாப்பிள்ளை நல்லவர் கிடையாது. போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர், என்று நித்தீஷ் பற்றிய விஷயத்தை போனில் காட்டுகிறார். இதை பார்த்ததிலிருந்து எனக்கு பைத்தியமே பிடித்து விட்டது, உங்களுக்கு பிடிக்காததை நான் பண்ணிடுவேன் என்ற பயத்தில் இப்படி ஒரு கல்யாணத்தை பண்ணி வைத்து விட்டீர்களே என்று கோபியிடம் கேட்கிறார்.

கோபியும் இந்த விஷயத்தை கேள்விப்பட்டு அதிர்ச்சியாகி மகளுடன் சேர்ந்து கண்ணீர் வடிக்கும் அளவிற்கு கோபி இனிய அழுது ஃபீல் பண்ணுகிறார்கள். இதை பார்க்கும் பொழுது நிஜத்திலும் சில பெண்களின் வாழ்க்கை இப்படித்தான் அமைகிறது என்பதற்கு ஏற்ப தான் கதை இருக்கிறது. அந்த வகையில் இப்படி ஒரு கல்யாணத்தையும் மாப்பிள்ளையும் என் தலையில் கட்டி வைத்துவிட்டீர்களே என்று கோபியிடம் இனியா பாவமாக கேட்கிறார்.

இந்த விஷயத்தை தெரிந்துகொண்டால் பாக்யா எடுக்கப் போகும் முடிவு நிச்சயம் இனியாவின் விவாகரத்து ஆகத்தான் இருக்கும். இது கோபி குடும்பத்திற்கு வழக்கமாக நடக்கிறது தான். எல்லோருக்கும் இரண்டு தான் என்று சொல்வதற்கு ஏற்ப இனியாவிற்கும் ஒருவேளை நித்திஷ் உடன் விவாகரத்து செய்துவிட்டு வேறு ஒரு உடன் திருமணத்தை நடத்தி வைக்கவும் வாய்ப்பிருக்கிறது.

vijay-founder-of-cinemapettai

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.

View all posts →