தேவா பெயரை வைத்து ஹிட் அடித்த ஹீரோக்கள்.. தனுஷ் கண்ட அதிர்ஷ்டம், ரஜினிக்கு வேலை செய்யுமா.?

Rajini : பொதுவாகவே ஹீரோக்களின் கதாபாத்திரத்தின் பெயர்களில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. சென்டிமென்டாகவும் இது சில படங்களில் ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது. அவ்வாறு பெரும்பாலான படங்களில் ஹீரோவின் பெயர் கார்த்திக் ஆக இருக்கும்.

இந்நிலையில் தேவா என்ற பெயரை வைத்து ஹிட் கொடுத்த நடிகர்களின் பட்டியலை இந்த பதிவில் பார்க்கலாம். எஸ் ஜே சூர்யா டைரக்ஷனில் உருவான வாலி படத்தின் அஜித் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். அதில் ஒரு கதாபாத்திரத்தின் பெயர் தேவா.

அடுத்ததாக ரஜினி நடிப்பில் வெளியான தளபதி படத்தில் மம்மூட்டியின் பெயர் தேவா தான். இதைத்தொடர்ந்து கேவி ஆனந்த் இயக்கத்தில் உருவான அயன் படத்தில் சூர்யாவின் கதாபாத்திரமும் தேவா என்ற பெயரில் இருந்தது. இப்படம் படம் பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற்றது.

தேவா பெயரை வைத்து ஹிட் அடித்த ஹீரோக்கள்

விஜய் தேவா என்ற படத்திலேயே நடித்திருந்தார். அதுவும் இந்த படத்தை அவரது தந்தை எஸ்ஏ சந்திரசேகர் இயக்கியிருந்தார். மேலும் பாகுபலி நடிகர் பிரபாஸின் கதாபாத்திரம் பெயர் தேவாவாக சலார் படத்தில் இருந்தது.

இப்போது தனுஷ் நடிப்பில் வெளியாகி இருக்கும் குபேரா படத்திலும் தேவா பெயர் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இப்போது குபேரா படம் நல்ல வசூலை. அதோடு மட்டுமல்லாமல் இப்போது ரஜினி நடிப்பில் கூலி படம் உருவாகி வருகிறது.

இதில் ரஜினி தேவாவாக நடித்திருக்கிறார். கண்டிப்பாக பிளாக்பஸ்டர் ஹிட் இந்த படம் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் தேவா சென்டிமென்ட் ஹீரோகளுக்கு ஒர்க் அவுட் ஆன நிலையில் ரஜினிக்கும் கை கொடுக்கும் என நம்பப்படுகிறது.