டிக்கெட் விற்பனையில் சக்கை போடு போட்ட 6 படங்கள்.. லிஸ்டில் இணைந்த குபேரா

Dhanush : இப்போது தியேட்டருக்கு சென்று டிக்கெட் புக் செய்வதை காட்டிலும் ஆன்லைனிலேயே அதிகமாக புக் செய்து விடுகின்றனர். அந்த வகையில் ரசிகர்கள் அதிகம் BookMyShow என்ற இணையம் வாயிலாக அதிகம் டிக்கெட்டுகள் புக் செய்து வருகின்றனர்.

அந்த வகையில் இதில் முதல் ஐந்து இடத்தை பிடித்த படங்களை பார்க்கலாம். முதலாவதாக நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான ஜெயிலர் படம் இருக்கிறது. கிட்டத்தட்ட 9.21 மில்லியன் டிக்கெட் விற்கப்பட்டிருக்கிறது.

இரண்டாவதாக லோகேஷ் கனகராஜ், விஜய் கூட்டணியில் உருவான லியோ படத்திற்கு 7.30 மில்லியன் டிக்கெட்டுகள் விற்கப்பட்டிருக்கிறது. இதைத்தொடர்ந்து மூன்றாவது இடத்தில் சிவகார்த்திகேயனின் அமரன் படம் தான் உள்ளது.

அதிக டிக்கெட் விற்பனை செய்யப்பட்ட ஐந்து படங்கள்

இந்த படம் 4.89 மில்லியன் டிக்கெட்டுகள் பெற்றிருந்தது. மேலும் சிவகார்த்திகேயனின் கேரியரில் அதிக வசூல் செய்த படமாகவும் அமரன் படம் அமைந்தது. வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான கோட் படம் நான்காவது இடத்தில் இருக்கிறது.

இந்தப் படம் 4.51 டிக்கெட்டுகள் விற்கப்பட்டிருந்தது. மேலும் டிஜே ஞானவேல், ரஜினி கூட்டணியில் உருவான வேட்டையன் படம் ஐந்தாவது இடத்தில் உள்ளது. வேட்டையன் படம் 2.74 மில்லியன் டிக்கெட்டுகளை பெற்றிருந்தது.

மேலும் தனுஷின் குபேரா படம் வெளியாகி மூன்று நாட்களான நிலையில் 1.056 மில்லியன் டிக்கெட்டுகள் விற்கப்பட்டிருக்கிறது. இப்போதும் தியேட்டரில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. ஆகையால் குபேரா எதிர்பார்த்ததைவிட அதிக வசூல் பெற வாய்ப்பு இருக்கிறது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →