உள்ளங்கையால் சூரியனை மறைக்க முடியுமா.? படையப்பா வரலாறு தெரியாம பேசும் கோமாளிகள்

Rajini: சோசியல் மீடியாவில் அரசியல் விவாதங்கள் ஒரு பக்கம் இருக்க முன்னணி நடிகர்களின் ரசிகர்கள் செய்யும் அலப்பறைகள் தான் அதிகமாக இருக்கிறது. இவர்களின் வாய்க்கா தகராறு எப்போதுமே முடிவுக்கு வராது.

அதிலும் ரஜினிக்கு எதிராக விஜய் கமல் ரசிகர்கள் ஒன்று கூடுவார்கள். அதே போல் சம்பந்தப்பட்டவர்களின் படம் வெளியாகும் போது எதிர் தரப்பு ரசிகர்கள் வேண்டுமென நெகட்டிவ் விமர்சனங்களை பரப்புவார்கள்.

அதில் முதல் காட்சி தொடங்குவதற்கு முன்பே ஃப்ளாப் என ஹாஷ் டேக் போடுபவர்களும் உண்டு. எதற்காக இந்த அளவுக்கு வன்மம் என நடுநிலை ஆடியன்ஸ் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதை ஒவ்வொரு ஹீரோவும் தன் பட ரிலீஸ் சமயத்தில் அனுபவித்து வருகின்றனர். அதில் தற்போது கூலி படத்தை தோல்வியடைய செய்யும் வேலையில் ஒரு கூட்டம் இறங்கி இருக்கிறது.

படையப்பா வரலாறு தெரியாம பேசும் கோமாளிகள்

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரமாண்டமாக எடுக்கப்பட்டுள்ள படம் ஆகஸ்ட் 14 திரைக்கு வருகிறது. ஆனால் எப்படி இந்த படம் ஹிட் ஆகுதுன்னு பார்க்கிறோம் என சில நடிகர்களின் ரசிகர்கள் கங்கணம் கட்டியுள்ளனர்.

அவர்களுக்கு ரஜினி ரசிகர்கள் படையப்பா பட கதையை சொல்லி பதிலடி கொடுத்துள்ளனர். அதாவது அந்த படம் ரிலீஸ் ஆன சமயத்தில் திருட்டு cd புழக்கம் இருந்தது. முதல் காட்சி முடிவதற்கு முன்பே HD தரத்தில் சிடி வந்துவிட்டது.

இதற்கு அப்போது இருந்த அரசியல் சூழ்நிலையும் ஒரு காரணம். ஆனாலும் மக்கள் கூட்டம் கூட்டமாக தியேட்டருக்கு வந்து படத்தை ரசித்து பார்த்து வெற்றியடைய வைத்தார்கள்.

இதற்கு காரணம் ரஜினி என்கிற மனிதர் தான். அதனால் என்ன செய்தாலும் அவர் படத்தை தோல்வி அடைய செய்ய முடியாது என தலைவரின் ரசிகர்கள் பதில் கொடுத்து வருகின்றனர்.

எல்லாம் சரிதான் என்றாலும் படம் ரசிகர்களை கவரும் வகையில் இருந்தால் எந்த நெகட்டிவ் விமர்சனங்களும் ஒன்றும் செய்ய முடியாது. பார்க்கலாம் கூலி இந்த சதிகளை எல்லாம் மீறி ஜெயிக்குமா என்று.