தொலைக்காட்சி

அய்யனார் துணை- நிலாவை பிராக்கெட் போட சோழன் செய்த செயல்.. இப்போதாவது அது நடக்குமா?

By · 24 ஜூன் 2025 · Updated 24 ஜூன் 2025
A surprise given by Cholan in the Ayyanar thunai. Nila is happy... Will Nila fall in love with Cholan?

Ayyanarthunai : விஜய் டிவியில் முற்றிலும் மாறுபட்ட கதையை மையமாகக் கொண்டு வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் தான் அய்யனார் துணை. இந்த சீரியலில், தான் இரண்டாவது மனைவியின் மகன் என பல்லவனுக்கு தெரிய வந்து பல்லவன் அதை ஏற்றுக் கொள்ள முடியாமல் வீட்டை விட்டு சென்று விட்டான்.

பிறகு வெகு நேரம் தேடி பல்லவனை வீட்டிற்கு அழைத்து வந்தார்கள். அதுவும் நிலாதான் புத்திசாலித்தனமாக யோசித்து பல்லவன் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து பல்லவனை கண்டுபிடிக்க உதவினாள். அதற்குப் பிறகு பல்லவன் தன் தவறு உணர்ந்து அண்ணன் மீது பாசமாக நடந்து கொண்டான். பிறகு பல்லவனும் நிலாவும் கோயிலுக்கு செல்கின்றனர். அங்கு நிலா பல்லவனுக்கு ஆறுதல் கூறுகிறாள். அதற்கு பல்லவன் நான் அவர்களின் தம்பி அல்ல என்று தெரிந்தும் அவர்கள் என் மீது இவ்வளவு பாசம் வைத்திருக்கிறார்கள்.

இதற்கெல்லாம் நான் தகுதியானவனா என்று தெரியவில்லை என்று கூறுகிறார். அதற்கு நிலா அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை அவர்களுக்கு எல்லாமே நீ தான் அதை புரிந்து கொள் உன் மனதில் உள்ள சஞ்சலத்தை விட்டுவிட்டு எப்போதும் போல மகிழ்ச்சியாக அவர்களுடன் வாழ கற்றுக்கொள் என கூறுகிறாள். இதைக் கேட்டு பல்லவனும் புரிந்து கொண்டு, சந்தோஷமாக நிலாவும் பல்லவனும் வீட்டிற்கு வருகிறார்கள். சேரன் நிலாவிடம் எங்கள் குடும்பம் பிரியாமலும், இன்று மகிழ்ச்சியிலும் இருப்பதற்கு நீ தான் காரணம் என கூறுகிறார்.

அதற்கு நிலா நானும் இந்த குடும்பத்தில் ஒருத்தி தான் என்னை பிரித்து பார்க்காதீர்கள் என்று கூறுகிறார் இதை பார்த்து சோழன் மகிழ்ச்சியடைகிறான். பிறகு நிலாவை நாம் ஒரு இடத்திற்கு செல்ல வேண்டும் என்று சோழன் அழைக்கிறான். அதற்கு நிலா எங்கே என்று சொல்லுங்கள் அப்போதுதான் நான் வருவேன் என கூறுகிறாள். அதற்கு சோழன் இது சர்ப்ரைஸ் என்று அழைத்துச் செல்கிறான்.

சோழன் மீது நிலாவிற்கு காதல் வருமா…

நிலாவின் சர்டிபிகேட் தயார் நிலையில் இருப்பதாக சோழனுக்கு அழைப்பு வந்த நிலையில், நிலாவை அழைத்துக் கொண்டு யூனிவர்சிட்டிக்கு செல்கிறார் சோழன். அங்கு சென்றவுடன் நிலாவிற்கு ஒன்றும் புரியவில்லை எனது சர்டிபிகேட் கிடைக்கவில்லையா என்று கேட்கிறார். அதற்கு சோழன் இல்லை சர்டிபிகேட் கிடைத்துவிட்டது என கூறுகிறான் இதைக் கேட்டு சந்தோஷமடைந்த நிலாவிற்கு தலைகால் புரியவில்லை. என்ன செய்வது என்று தெரியாமல் சோழனுக்கு கண்களில் காதலுடன் மற்றும் நன்றி உணர்வுடனும் கை கொடுத்து நன்றி சொல்கிறார்.

சோழன் மீது நிலாவிற்கு காதல் வருவதற்கான முதல் அடிக்கல்லை சோழன் நாட்டியுள்ளார் என்று கூறலாம். நிலாவும் அனைத்தையும் மறந்து சோழனுடம் சந்தோசமாக இருக்கிறார். பிறகு பீச்சுக்கு சென்று இந்த சந்தோஷத்தை கொண்டாடுகிறார்கள். இவ்வாறு கொஞ்சம் கொஞ்சமாக சோழன் மீது நிலாவிற்கு காதல் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.